பழசை மறக்காதீங்க.. சக்கரம் சுற்றுது! ஆணவம் வேண்டாம்.. திமுகவுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி
சென்னை: இன்று 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் இதே திமுக ஒரு கட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்ததை மறந்துவிட வேண்டாம். இதை மறந்து பேசக்கூடாது. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆணவம் வேண்டாம் என்று இன்று உண்ணாவிரத போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ நடவடிக்கை கோரியும் மற்றும் சட்டசபையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களை பற்றி கவலைப்படாத அரசு திமுக அரசு. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்று கருதி தான் இப்போது வரை அவர் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா ஆட்சியில், எனது ஆட்சியில் காவல்துறை நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் இப்போது அப்படியல்ல. எல்லாத்தையும் அடக்கி, ஒடுக்கி ஆண்டுக்கொண்டு இருக்கிறார்கள். கருத்து சுதந்திரமே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி எப்போது தொடங்கப்பட்டதோ அப்போதே கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது. எதிக்கட்சிகளை பேசவிடாமல் அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள்.
சிபிசிஐடி விசாரணை நடந்தால் உண்மை குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடுவார்கள். உண்மை வெளிவராது. மாநில கட்டுப்பாட்டில் சிபிசிஐடி உள்ளதால் உண்மை வெளிவராது. குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அவர் அப்படி செயல்படவில்லை. அமைச்சர்களிடம் பதில் கேட்டால் அதற்கும் சபாநாயகரே பதில் சொல்கிறார். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் செயல்படாதது வருத்தம் அளிக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது. மொத்த நாடும் இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இன்றைக்கு 40க்கு 40 வெற்றி பெற்றுவிட்டோம் என்பதாலும், அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்துவிட்டதால் இப்படி பொறாமையில் நாங்கள் வெளிநடப்பு செய்வதாக சொன்னார்கள்.
இதே திமுக ஒரு கட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்ததை மறந்துவிட வேண்டாம். இதே நிலை அன்று உங்களுக்கு இருந்தது. இதை மறந்து இப்படி பேசக்கூடாது. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆணவம் வேண்டாம். திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் கள்ளக்குறிச்சி பற்றி மவுனம் காப்பது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications