Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நேரத்தில் அதிமுக + பாஜகவை.. திணறடித்த ஸ்டாலின்.. திமுக விடாமல் சிக்ஸ் அடிக்குதே.. கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி தொடர்பான முடிவுகளை அதிரடியாக எடுத்து வருகிறது. பாஜக, அதிமுக இன்னும் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாத நிலையில் திமுக இதில் அதிரடி காட்டி வருகிறது.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை வேகமாக எடுத்து வருகின்றன. லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DMK showing face pace actions and decision in Lok Sabha election in 2024 Tamil Nadu

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் கூட்டணி: இது போக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள்.

2024 லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப நாட்களாக தெரிவித்து வருகிறார். அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

கோவையில் போட்டி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிட வாய்ப்புள்ளது. அல்லது கோயம்புத்தூர் இல்லையென்றால் பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தென் சென்னையை கமல் விரும்பினாலும்.. அங்கே மீண்டும் தமிழச்சி தங்க பாண்டியன் நிற்க வைக்கப்படலாம் என்கிறார்கள்.

பாஜக, அதிமுக பின்னடைவு; ஆனால் இன்னொரு பக்கம் பாஜக, அதிமுக இன்னும் கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாத நிலையில் திமுக இதில் அதிரடி காட்டி வருகிறது.

உதாரணமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் பெரிதாக முன்வரவில்லை. 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு இருந்ததாம். மோடி வருவதற்கு முன் கூட்டணியை இறுதி செய்ய வேண்டும்.. நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு இருந்ததாம். ஆனால் பாஜகவால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. கூட்டணி தலைவர்களை மோடி இருக்கும் மேடையில் ஏற்றுவேன் என்று அண்ணாமலை கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியவில்லை.

பாஜக கூட்டணி இல்லை: அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதாக தகவல்கள் வருவதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர திட்டமிட்டு உள்ளன.

இன்னொரு பக்கம் அதிமுகவும் கூட பாமக, தேமுதிகவுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. பாமக 10 இடங்களும், தேமுதிக 7 இடங்களும் கேட்பதாலும், இரண்டு கட்சிகளுமே ராஜ்ய சபா சீட் கேட்பதாலும் இந்த கூட்டணி அமைய முடியாத சூழல் உள்ளது.

திமுக அதிரடி: இதன் மூலம் திமுக முதல் ஆளாக தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட தொடங்கி உள்ளது. பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் ஜெயலலிதா செய்யும் முக்கியமான செயல் ஒன்று அக்கட்சியில் மிஸ்ஸாகி வருகிறது.

நீங்க எல்லாம் பொறுமையா பேச்சுவார்த்தை நடத்துங்க.. நாங்க துரிதமா முடிவு எடுத்துட்டோம் என்று சொல்லும் அளவிற்கு திமுக தமிழக தேர்தல் களத்தில் வேகம் காட்ட தொடங்கி உள்ளது. அதிமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை கூட முடிக்கவில்லை.

பொதுவாக தேர்தல் நேரங்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் ஆளாக அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பார். மற்ற கட்சிகள் ஆலோசனையை தொடங்கும் முன்பே ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பார்.

இப்படி செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் ஏற்படும். இன்னொரு பக்கம் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் துரிதமாக பணிகளை தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பிக்க வசதியாக இருக்கும். நாங்கள் தேர்தலுக்கு ரெடி என்று சொல்லக்கூடிய சைக்கலாஜிக்கல் யுக்தி இது.. இதைத்தான் தற்போது ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் எடப்பாடி இதை மிஸ் செய்துவிட்டார்.

கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் சென்றாலும் இன்னொரு பக்கம் முதல் கட்டமாக சீட் ஒதுக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலை திமுகவினர் வெளியிட்டுள்ளனர். இதனால் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அழுத்தம் தற்போது அதிமுகவிற்கு ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+