இந்தி தெரியாததால் தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகலையா.. நடராஜனுக்கு ராஜீவ் காந்தி பதிலடி
சென்னை: இந்தி தெரியாததால் கஷ்டப்பட்டேன் என்று கூறிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு திமுக மாணவரணி தலைவரான ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். எங்களுக்கு எப்பவும் நீங்கள் எங்கள் தங்கராசு நடராஜன் என்றும் அவாளுக்கு நீங்க எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு.... நட்டு..தான் என்றும் ராஜீவ் கந்தி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன், சேலத்தில் தான் படித்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந் கொண்டு மாணவர்களிடம் பேசினார். அப்போது நடராஜன் கூறுகையில், "தமிழ் தவிர எனக்கு எதுவும் தெரியாது. முதல் முறையாக பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது இந்தி மொழி தெரியாமல் கஷ்டப்பட்டேன். ஏனெனில் அங்கு முழுசா இந்தி தான். ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு..

ஒரு மாதிரி தனியாக இருக்குற மாதிரி ஃபீல் இருந்தது. தொடக்கத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கு விளையாட ரொம்ப பிடிக்கும் என்பதால் கஷ்டங்களை தாண்டி விளையாடுவேன். இதெல்லாம் ஒரு பிரச்சனை என்று நினைத்து ஒதுங்கி இருந்தால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆரம்பத்தில் பேசவே ரொம்ப தயங்கினேன். அதனால் தொடக்கத்தில் இருந்தே தயக்கமின்றி பேசக் கற்றுக்கொள்ளுங்கள் " என்றார்.
இதனிடையே நடராஜன் பேசியதற்கு திமுகவினர் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். திமுக மாணவரணி தலைவரான ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், எங்களுக்கு எப்பவும் நீங்கள் எங்கள் தங்கராசு நடராஜன் தான் அவாளுக்கு நீங்க எவ்வளவு வளர்ந்தாலும் நட்டு.... நட்டு..தான்!!

ஆனால் பாருங்க தல நடராஜன், IPL விளையாட வருகிற கம்மின்ஸ், சுனில் நரேன், ஹெட், பட்லர், சால்டு இவர்கள் எல்லாம் எந்த பள்ளியில் இந்தி படித்தார்கள்....தெரியவில்லையே??? உங்களுக்கு இந்தி தெரியாததால் தான் உங்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யவில்லை அப்படித்தானே???
சரி..சரி...விடுங்க... ஒரே கேள்வி தான் உங்களிடம்...சேலத்தில் அடகு கடை வந்திருக்கும் நம்ம சேட்டுக்கு இந்தி நல்லா தெரியுமே ஏன் அவரு ஐபிஎல் கூட விளையாடல?












Click it and Unblock the Notifications