ஆளுநர் ரவியை கண்டித்து நாளை போராட்டம்.. சேலம் பெரியார் பல்கலை. செல்லும் ஆளுநருக்கு திமுக எதிர்ப்பு!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியது விதிமீறல் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழிலரசன் அறிவித்துள்ளார்.
துணைவேந்தர் ஜெகநாதனை காப்பாற்றுவதற்காகவே ஆளுநர் ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். ஜெகநாதன் ஒரே நாளில் ஜாமீனில் வெளியே வந்தது பற்றி ஐகோர்ட்டே கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொள்வார்கள் என சி.வி.எம்.பி எழிலரசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications