சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்கள் திருமண வயது 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த பரிசீலனை... கனிமொழி எம்.பி. வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: பெண்கள் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்வது வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுவயதிலேயே பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இப்போதும் வட மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.

Exclusive: அதிமுகவில் இனிமேல் தான் கச்சேரியே உள்ளது... பொறுத்திருந்து பாருங்க... வெற்றிவேல் ஆருடம்Exclusive: அதிமுகவில் இனிமேல் தான் கச்சேரியே உள்ளது... பொறுத்திருந்து பாருங்க... வெற்றிவேல் ஆருடம்

திருமணம்

திருமணம்

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என்றும் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இதில் ஒரு சில மாற்றங்களை செய்வதற்காக மத்திய அரசு மறு பரிசீலனை குழு ஒன்று அமைத்துள்ளது. இதன் மூலம் பெண்கள் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்தும் முடிவில் இருக்கிறது மத்திய அரசு.

வரவேற்பு

வரவேற்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள பெண் உரிமைவாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் திருமண வயதை மறுபரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு தங்கள் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் பலரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழியும் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிரதமர் அறிவிப்பு

பிரதமர் அறிவிப்பு

பெண்கள் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்பதாக திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். அதேவேளையில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மத்திய அரசு

மத்திய அரசு

அண்மைக்காலமாக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்த்து வந்த திமுக, பெண்கள் திருமண வயதை உயர்த்தும் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பெண்கள் திருமண வயது குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

English summary
dmk support to consideration to raise the age of marriage for women from 18 to 21
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X