சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஆட்டி வைத்த ஸ்டாலின்! நடுவானில் கை மாறிய "பைல்ஸ்".. நீங்க வாங்க! ஆளுநர் ரவி செய்த சம்பவம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் விவகாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில்தான் தமிழ்நாடு அரசியல் தொடர்பான முக்கியமான ரிப்போர்ட் ஒன்று நடுவானில் கைமாறியதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து இன்றோடு ஒரு வாரம் ஆக போகிறது. ஆனால் மோடியின் இந்த வருகையின் போது ஏற்பட்ட அதிர்வலைகள் இன்னும் முடிவிற்கு வந்தபாடில்லை. முக்கியமாக இந்த பயணத்தின் போது முக்கியமான ரிப்போர்ட் ஒன்று கை மாறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் ஆளும் திமுகவிற்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

காசி தமிழ் சங்கமம்- சங்கிகளின் சங்கமம் என கடும் விமர்சனம்! நவ.18-ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி! காசி தமிழ் சங்கமம்- சங்கிகளின் சங்கமம் என கடும் விமர்சனம்! நவ.18-ல் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

மோதல்

மோதல்

முக்கியமாக இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. திராவிடம் என்பது இனம் அல்ல. அது ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தது. நாம் எல்லோரும் இந்துக்கள், இது இந்து நாடு என்றெல்லாம் ஆளுநர் ஆர். என் ரவி பேசி வருகிறார். நியமன பதவியில் இருந்து கொண்டு, ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக திமுக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் விவகாரம் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளது.

டெல்லிக்கு சென்ற மோதல்

டெல்லிக்கு சென்ற மோதல்

அதன்படி ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக டெல்லியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. இந்த மனுவில் முக்கியமான கோப்பு ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர். திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக கட்சிகள் எல்லாம் இதில் ஒருமித்த குரல் கொடுத்து உள்ளன.

பைல்

பைல்

டெல்லியில் திமுக மேற்கொண்டு இந்த மூவிற்கு பின் இருந்தது முதல்வர் ஸ்டாலின்தான் என்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் இதில் கையெழுத்து போடவில்லை. முதல்வரே ஆளுநருக்கு எதிராக கையெழுத்து போடமுடியாது என்பதால் பொருளாளர் எம்பி டி ஆர் பாலு இதில் கையெழுத்து போட்டுள்ளார். டெல்லியில் ஆளுநருக்கு செக் வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த முயற்சியை எடுத்துள்ளார். இதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை என்றாலும், நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க எந்த எல்லைக்கும் போவோம் என்பதை காட்ட திமுக இப்படி செய்ததாக தெரிகிறது.

 ஆளுநர்

ஆளுநர்

இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அப்போது மதுரையில் இருந்து பிரதமர் மலடி ஹெலிகாப்டரில் தனியாக திண்டுக்கல் செல்வதாகவும், ஆளுநர் ரவி காரில் திண்டுக்கல் செல்வதாகவும் திட்டம் இருந்தது. வானிலை காரணமாக ஆளுநரும் ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் சென்றார். இந்த சந்திப்பில்தான் நடுவானில் முக்கிய பைல் ஒன்று கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது.

சட்ட ஒழுங்கு

சட்ட ஒழுங்கு

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பற்றிய பைல் இது என்கிறார்கள். ஆளுநர் ஆர். என் ரவி உள்துறையில் அனுபவம் கொண்டவர் என்பதால், உள்துறை தொடர்பான முக்கியமான சில உளவு தகவல்கள் அடங்கிய பைலை கொடுத்தார் என கூறப்படுகிறது. அதோடு கோவை கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாகவும் முக்கிய விவரங்கள் அடங்கிய கோப்புகள் இதில் இருந்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் ஆளுநருக்கு தமிழ்நாடு திமுக கூட்டணி செக் வைத்த நிலையில்தான் ஆளுநர் ரவி இந்த பைலை வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
DMK take the ball against Governor to Delhi: R N Ravi replies it with a report to Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X