ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக சண்முகம், வில்சன் போட்டி- மதிமுகவுக்கு 1 இடம்!
Recommended Video
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான அதிமுகவின் அர்ஜூனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகியோரது பதவிக் காலம் வரும் 24-ந் தேதி முடிவடைகிறது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த கனிமொழி லோக்சபா தேர்தலில் வென்றதால் தமது பதவியை ராஜினாமா செய்தார். இந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் வரும் 11-ந் தேதி. இதனைத் தொடர்ந்து போட்டி நீடித்தால் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

ஒரு எம்.பிக்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
தமிழக சட்டசபையில் உள்ள தற்போதைய பலத்தின் அடிப்படையில் ஆளும் அதிமுகவுக்கு 3; எதிர்க்கட்சியான திமுகவுக்கு 3 எம்.பிக்கள் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

பாமகவுக்கு 1 இடம்?
லோக்சபா தேர்தலின் போது பாமகவுக்கு 1 ராஜ்யசபா எம்.பி. இடம் வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது. இதனடிப்படையில் பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் அதிமுக அரசை பாமக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. ராஜ்யசபா எம்.பி. சீட்டை தர மறுத்ததாலே அதிமுக மீது பாமக பாய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முட்டி மோதும் அதிமுக பிரமுகர்கள்
அதிமுகவில் எஞ்சிய 2 இடங்கள் யாருக்கு என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது. லோக்சபா தேர்தலில் தோற்ற தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, அன்வர்ராஜா, கோகுல இந்திரா என பலரும் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. நாளை மறுநாள் அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் என தெரிய கூடும்.

ராஜ்யசபா எம்.பி.யாகும் வைகோ
திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களை ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். 3 ராஜ்யசபா இடங்களில் 1 இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடக் கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வைகோ மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய உள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொமுச சண்முகத்துக்கு வாய்ப்பு
எஞ்சிய 2 இடங்களுக்கான திமுகவின் வேட்பாளர்களையும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொமுசவின் பொதுச்செயலாளரான சண்முகம் மற்றும் மூத்த வழக்க்றிஞர் வில்சன் ஆகியோ ராஜ்யசபா வேட்பாளர்கள் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். சண்முகத்துக்கு வாய்ப்பு அளித்ததன் மூலம் தொழிற்சங்கத்தினரை தங்கள் வாக்கு வங்கிகளாக தக்க வைக்க முடியும் என்பது திமுகவின் கணக்கு.

வில்சனுக்கும் இடம்
மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்தார். அவரை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு இரவோடு இரவாக அனுமதி பெற்று தந்தவர் வில்சன். இந்த நற்பெயரின் அடிப்படையில் வில்சனுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு










Click it and Unblock the Notifications