10 ஆண்டு இலட்சிய பிரகடனம்.. திருச்சியில் தொடங்கிய திமுக மாநாடு.. பெரிய அறிவிப்பை வெளியிடும் ஸ்டாலின்
சென்னை: 'விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக சார்பாக மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இன்று காங்கிரஸ் - திமுக இடையில் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டது. காங்கிரசுக்கு 25 இடங்கள் + குமரி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளோடு திமுக கூட்டணி உடன்படிக்கை செய்துவிடும்.
இந்த நிலையில் இன்று திமுக சார்பாக மிகப்பெரிய பொதுக்கூட்டம் திருச்சியில் நடக்கிறது. திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது.
கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்.. பாமக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி

கூட்டம்
‘விடியலுக்கான முழக்கம்' என்ற தலைப்பில் திருச்சியில் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். காலை 10 மணிக்கு திருச்சி வந்த ஸ்டாலின் சில நிமிடங்களுக்கு முன் மாநாட்டு பந்தலில் 90 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். மிக நீண்ட கூட்டமாக இது நடக்க உள்ளது.

காலை 11 மணி
இதில் ஒவ்வொரு துறை ரீதியாக அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் பேச உள்ளனர். திமுக சார்பாக எம்பிக்கள் ஆ. ராசா, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, கனிமொழி ஆகியோரும் உதயநிதி ஸ்டாலின் போன்ற திமுக தலைவர்களும் பேச உள்ளனர். அரசியல் சாராத வல்லுனர்களும் பேசுகிறார்கள். ஜெயரஞ்சன் போன்ற பொருளாதார நிபுணர்களும் இன்று உரை நிகழ்த்த உள்ளனர்.

திமுக மாநாடு
திமுகவின் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 10 ஆண்டு இலட்சிய பிரகடனம் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளார். இதனால் இந்த மாநாடு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு
பல்வேறு துறை ரீதியாக காலையில் இருந்து வல்லுநர்கள் பேச உள்ளனர். திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு 700 ஏக்கரில் பெரிய பந்தல், மேடை அமைப்புகள் செய்யப்பட்டு, கூட்டம் நடக்க உள்ளது. பல்லாயிரம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. திமுக இதை பெரிய திருப்பு முனை மாநாடாக கருதுகிறது.