Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிமுக தலைக்கு மேல் கத்தி.. மல்லை சத்யா மூலம் செக் வைக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசியல் களம் இப்போதே அனல் பறந்து வருகிறது. திமுக கூட்டணியில் மதிமுக அவ்வபோது போர் கொடி எழுப்பி வருகிறது. மதிமுகவுடன் மல்லுகட்டி தனிக்கட்சி தொடங்கிய மல்லை சத்யா மூலம் அவர்களுக்கு செக் வைக்க திமுக ஸ்கெட்ச் போட்டுள்ளது. மறுபக்கம் திமுகவிடம் எம்எல்ஏ சீட் கேட்டு மல்லை சத்யாவும் துண்டு போட்டுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு தேர்தல் களம் இப்போதிருந்தே பரபரக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி, தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.

MDMK Mallai Sathya

மதிமுக Vs மல்லை சத்யா

திமுக தன்னுடைய அதே கூட்டணி பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் தவெக சார்பிலும் ஒரு கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. தேர்தல் என்றால் பல்வேறு புதிய கட்சிகள் உருவாகும். அந்த வகையில் மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மல்லை சத்யா, தற்போது திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

திமுகவில் சீட்டு

திமுகவுடன் நெருக்கம் காட்டி மதிமுகவுக்கு செக் வைப்பதுதான் மல்லை சத்யாவின் திட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கூறுகையில், "திமுக கூட்டணியில் எம்எல்ஏ சீட் கேட்க சத்யா திட்டமிட்டுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கூட பரவாயில்லை என்கிற முடிவில் இருக்கிறார்.

ஒருவேளை எம்எல்ஏ சீட் கிடைக்கவில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கேட்பார். 2026 சட்டமன்ற தேர்தலில் இருந்தே திமுகவுக்கு ஆதரவாக சத்யா பிரச்சாரம் செய்வார். திமுக - மதிமுக இடையே சமீப காலங்களாக உள்ள பனிப்போர் தமிழ்நாடை அறிந்தது தான். துரைவைகோ பாஜகவுடன் அதிகளவு நெருக்கம் காட்டி வருகிறார்.

பலே திட்டம்

மதிமுகவை தங்கள் கூட்டணியில் இழுக்க நடந்த பேச்சுவார்த்தையை பாஜக அமைச்சர் எல்.முருகனே வெளிப்படையாக கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ திருச்சியில் போட்டியிட்டதில் இருந்தே திமுக இடையே அவர் முரணாக தான் இருக்கிறார். இந்த அரசியலை பற்றி திமுக அறியாமல் இல்லை.

அதன் காரணமாக தான் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்ட முத்து ரத்தினத்தை தங்கள் திமுக தங்கள் பக்கம் இழுத்தனர். மதிமுக தொடர்ந்து பாஜக பக்கம் சாய்ந்தால், அவர்களுக்கு செக் வைக்க திமுகவுக்கு மல்லை சத்யா தேவைப்படுவார். ஏற்கனவே முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்காக கருணாஸ், வன்னியர் ஓட்டுக்காக வேல்முருகன் உரூவானதை போல மல்லை சத்யா மூலம் மதிமுக வாக்குகளை தக்க வைக்கலாம் என்று திமுக கணக்கு போடுகிறது." என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+