சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொஞ்சம் மிஸ் பண்ணாலும்.. கதை க்ளோஸ்.. இபிஎஸ் குறி வைத்த "15.9 லட்சம்".. மொத்தமாக தர போகும் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக, திமுக என்று இரண்டு தரப்பும் ஒரே விஷயத்தைதான் குறி வைத்துள்ளனர்.. 15.9 லட்சம் வாக்குகள்தான் இந்த தேர்தலில் பல தொகுதிகளில் கேம் சேஞ்சர்களாக இருக்க போகிறது. இதைத்தான் இரண்டு கட்சிகளும் குறி வைத்துள்ளன. ஆனால் இந்த 15.9 லட்சம் வாக்குகள் நேரடியாக வாக்கு சாவடியில் போடப்படும் வாக்குகள் கிடையாது.. இந்த 15.9 லட்சம் வாக்குகள் குறித்து பார்க்கும் முன் ஒரு குட்டி ஸ்டோரி.

2016 சட்டசபை தேர்தல். திமுக, அதிமுக என்று இரண்டு கூட்டணியும் மிகவும் வலிமையாக இருந்த சமயம். யார் வேண்டுமானாலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது. கடைசி வர தேர்தல் பரபரப்பாக சென்றது.

கடைசி நொடியில் திமுகவை அதிமுக முந்தி தேர்தலில் வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வென்ற வாக்கு சதவிகிதம் 40.88%. அது சமயம் திமுக வென்ற வாக்கு சதவிகிதம் 39.85%. இரண்டு கட்சிக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் 1%.

கணக்கு

கணக்கு

வெறும் 1% வாக்குகள்தான் அதிமுகவை இந்த தேர்தலில் வெற்றிபெற வைத்தது. ஆகவே ஒவ்வொரு வாக்கும் இந்த தேர்தலில் மிக முக்கியம். சரி பழைய கதைக்கு வருவோம்.. திமுக, அதிமுக இரண்டும் குறி வைக்கும் அந்த 15.9% வாக்குகள் என்பது தபால் வாக்குகள் ஆகும். வீட்டில் இருந்து மக்கள் அளிக்க போகும் தபால் வாக்குகள். தமிழகத்தில் உள்ள 15.9 லட்சம் தபால் வாக்குகள் என்பது கிட்டத்தட்ட 3% வாக்குகள் ஆகும்.

மாற்றம்

மாற்றம்

இந்த 15.9 லட்சம் வாக்குகள்தான் இந்த தேர்தலில் மொத்தமாக முடிவை மாற்ற போகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு தபால் வாக்குகள் மிகவும் குறைவாக கிடைத்தது. இதுவே அந்த கட்சியின் வெற்றிக்கும் எதிராக திரும்பியது. இன்னொரு பக்கம் அதிமுக அதிக அளவு தபால் வாக்குகளை அள்ளியது . இந்த நிலையில் இந்த முறை யார் இந்த 15.9 லட்சம் வாக்குகளை அள்ள போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எப்படி

எப்படி

தபால் வாக்குகள் என்பது வீட்டில் இருக்கும் வயதானவர்கள், ராணுவம் போன்ற பணிகளை செய்பவர்கள், தேர்தல் பணிகளை செய்பவர்கள், போலீசார், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், உடல் முடியாதவர்கள் வாக்களிக்க ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட வசதி ஆகும். இந்த தபால் வாக்கில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களால் இந்த முறை விதிகள் மாற்றப்பட்டுள்ளன .

விதி எப்படி

விதி எப்படி

இந்த முறை தபால் வாக்கு செய்பவர்கள் படிவம் 12 டி யை பூர்த்தி செய்து நேராக தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டும். அதை பரிசீலித்து லிஸ்ட் தயார் செய்யப்படும். இந்த பணிகள் எல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதன் மூலமாத்தான்15.9 லட்சம் பேர் தபால் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தலின் போது, தேர்தல் ஆணைய ஊழியர்கள் இவர்களிடம் வீட்டிற்கே வந்து வாக்குகளை வாங்கிவிட்டு போவார்கள். முறைகேடு நடக்காமல் இருக்க இந்த நிகழ்வு வீடியோ எடுக்கப்படும்.

வீடியோ

வீடியோ

இந்த நிலையில் இந்த 15.9 லட்சம் வாக்குகளைதான் இரண்டு கட்சிகளும் குறி வைத்துள்ளது .1% வாக்கே கடந்த தேர்தலில் முடிவை மாற்றியது. கடந்த முறை போல ஏமாறாமல் இந்த முறை தபால் வாக்குகளை அள்ளும் முனைப்பில் திமுக இருக்கிறது. அதிமுகவும் 15.9 லட்சத்தில் குறைந்தது 10 லட்சம் வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

மிஸ் பண்ணா

மிஸ் பண்ணா

இந்த வாக்குகளை.. தபால் வாக்குகள் தானே என்று மிஸ் செய்ய முடியாது. இதுதான் கடைசி கட்டத்தில் இழுபறி ஏற்படும் போது முடிவை மாற்றும். இதனால் இவர்களின் வாக்குகளை கவரும் வகையில் இரண்டு கட்சிகளும் தேர்தல் பணிகளை செய்ய முடிவு செய்துள்ளன.., இதற்கு ஏற்றபடி பிரச்சார திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது . முக்கியமாக திமுக இந்த முறை தபால் வாக்குகளை பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

English summary
DMK vs AIADMK: 15.9 lakhs postal ballots will change the election result in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X