தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக.. சைலண்ட் மோடில் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவில் நடப்பது என்ன?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து பல்வேறு பணிகளை முடித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி சைலண்ட் மோடில் இருந்து வருவது விவாதமாகி இருக்கிறது. திமுக தரப்பில் இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலினின் இந்த தாமதத்திற்கான முடிவு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்தே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். ஏற்கனவே டெல்லி பயணித்து பாஜக உடனான தொகுதி பங்கீட்டை முடித்துவிட்ட சூழலில், அதற்கு முன்பாகவே பாமகவுடனான தொகுதி பங்கீட்டையும் முடித்தார்.

மறுபக்கம் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக பியூஷ் கோயலுக்கு விருந்து கொடுத்து வருகிறார். அதேபோல் மறுபக்கம் விஜய்யை தனிமைப்படுத்தும் பணிகளையும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கையாண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை கூட நடத்தவில்லை.
காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், மநீம, தவாக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை எந்தக் கட்சியுடனும் திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையையோ, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையோ நடத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு நேரில் வந்த போதும், ஸ்டாலின் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
திமுகவின் இந்த தாமதத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த விவாதம் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் ஸ்டாலின் இதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் இதுபோன்ற தாமதங்களை செய்ததே கிடையாது. ஆனால் இம்முரை ஸ்டாலின் வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
ஏனென்றால் அதிமுகவின் தொகுதி பங்கீடு விவகாரங்கள் வெளியான பின், உடனடியாக திமுக தனது பணிகளை தொடங்கி 2 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு அதிமுக ஒரு வாய்ப்பாக இருந்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை தெளிவாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் சட்டசபைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அப்போது திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications