உதயநிதியை எதிரியாக நினைக்கிறார்.. விஜய்யால் யாரையும் சமமாக பார்க்க முடியாது.. எஸ்வி சேகர் பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை தன்னுடைய எதிரியாக தவெக தலைவர் விஜய் பார்ப்பதாக நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். விஜய்யால் எந்தக் கூட்டணியையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய எஸ்வி சேகர், யாரையும் சமமாக பார்க்கும் மனப்பக்குவம் விஜய்யிடம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு பின், தவெக தலைவர் விஜய் இதுநாள் வரை பொதுவெளியில் தலைகாட்டவில்லை. ஒரு மாதமாக அமைதியாக இருந்த தவெக நிர்வாகிகள், ஒரு வழியாக தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளனர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக சார்பாக தேவர் சிலை மற்றும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

DMK vs TVK

ஆனால் தவெக தலைவர் விஜய் வீட்டில் இருந்தவாறே முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏற்கனவே கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து மாமல்லபுரத்தில் சந்தித்த விவகாரமே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் விஜய் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்வி சேகர் பேசுகையில், விஜய் செய்தது நல்ல விஷயம். ஏனென்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை பனையூருக்கு கொண்டு வாருங்கள்.. அஞ்சலி செலுத்த வேண்டும் என்று விஜய் சொல்லவில்லை.. அதற்காக விஜய்யின் மனதைரியத்தை பாராட்ட வேண்டும். சங்கவி என்ற பெண் சுயமரியாதையுடன் விஜய்யின் பணத்தை திருப்பி அனுப்பினார்.

அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.. அதேபோல் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் வீட்டிற்குள் இருந்து அரசியல் செய்கிறார்.. நாளை எம்எல்ஏ ஆகிவிட்டால், எல்லோரும் பனையூருக்கு வாருங்கள், சட்டசபை பனையூரில் நடக்கட்டும் என்று சட்டசபைக்கு வராமல் இருப்பாரா? விஜய் குழந்தைத்தனமாக இருக்கிறார். சினிமா நடிகர் என்ற மேக் அப்பை களைக்காமல் இருக்கிறார்.

விஜய்யால் எந்த கூட்டணியையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் யாரையும் சமமாக நடத்தக் கூடிய மனப்பக்குவம் கிடையாது. விஜய் சென்றால் கூட்டம் வருமென்றால், பனையூருக்கும் கூட்டம் வந்திருக்க வேண்டும் அல்லவா? அஜித் குமார் மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல சென்ற போது ஏன் கூட்டம் வரவில்லை? அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது ஏன் கூட்டம் வரவில்லை?

விஜய் விருப்பப்பட்டால் கூட்டம் வரும்.. உதயநிதி ஸ்டாலினை விஜய் தனது எதிரியாக பார்க்கிறார்.. அதனால் ஏற்பட்ட விளைவே கரூர் சம்பவம்.. அதிமுக, பாஜக, தவெக கூட்டணி அமைத்தால், ஒரு சிறுபான்மையினர் வாக்கு கூட அவர்களுக்கு கிடைக்காது.. ஏன் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். இந்தக் கூட்டணி இப்படியே தொடர்ந்தால் திமுக 7வது முறையாக ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+