Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமியர்கள் வாக்கு.. ஆட்டத்தை மாற்றிய திருப்பரங்குன்றம்.. முந்தும் திமுக.. அப்போ விஜய்க்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி இருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 15 முதல் 20 சதவிகிதம் வரை சிறுபான்மை மக்களின் வாக்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட அளவிலான வாக்குகள் இருக்கிறது.

குறிப்பாக ராமநாதபுரம், வேலூர், விழுப்புரம், சென்னை, திருச்சி, நாகை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலோர மாவட்டங்களிலும் கணிசமான அளவிற்கு இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இந்த வாக்குகளை குறி வைத்து பல்வேறு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தரப்பில் சிறப்பாக காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக பார்க்கப்படுகிறது.

DMK vs Vijay

ஜெயலலிதா இருந்தவரை இஸ்லாமியர்களின் ஆதரவு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இருந்து வந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சிஏஏவுக்கு ஆதரவு அளித்து அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி, பின் பாஜக கூட்டணியில் இருந்து லோக்சபா தேர்தலின் போது விலகினார்.

தொடர்ந்து எஸ்டிபிஐ மாநாட்டில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்று தெரிவித்தார். ஆனால் தேர்தல் முடிந்த ஓராண்டிலேயே மீண்டும் பாஜக கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. இதனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் அடுத்த சில நாட்களிலேயே முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இருந்து வருகிறது. அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரியும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார். எஸ்டிபிஐ தரப்பும் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இப்படியான நேரத்தில் திடீரென திருப்பரங்குன்றம் விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது.

பாஜக உடன் கூட்டணி அமைத்த போதே, இஸ்லாமியர்கள், அதிமுக ஆதரவில் இருந்து பின் வாங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதன்பின் விஜய் பெரியளவில் இஸ்லாமியர்கள் வாக்குகளை பிரிப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் நிலைப்பாடு குறித்து இதுவரை அறிக்கையும் வெளியிடப்படவில்லை. புதுச்சேரி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய போதும் கூட, விஜய் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருந்து நேரடியாகவே எதிர் கொண்டது. இஸ்லாமியர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் முடிவு எடுத்தது.

அதேபோல் நீதிமன்றத்திலும் திமுக தீவிரமாக போராடி வருகிறது. இதனால் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தவர்களும் கூட இப்போது திமுக ஆதரவு மனநிலைக்கு மாறிவிட்டதாக தெரிகிறது. நாம் பல வயதுள்ள இஸ்லாமியர்கள் சிலரிடம் பேசியபோது, இவ்வாறு தெரிவித்தனர்.

குறிப்பாக இஸ்லாமிய இளைஞர்கள், இளம் பெண்கள் பலரும் சினிமா மோகம் காரணமாக, முன்பு, விஜய்க்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் எதுவுமே பேசாததால் அவர்களும் வெறுத்துப் போயுள்ளதாக நாம் பேச்சுக்கொடுத்தபோது தெரியவந்தது.

வஃக்பு வாரிய திருத்தச் சட்ட விவகாரத்திலும் சட்டசபையில் திமுக தீர்மானம் கொண்டு வந்தது. உச்சநீதிமன்றத்திலும் ஆ.ராசா நேரடியாக வழக்கு போட்டுள்ளார். இதனால் சட்டசபைத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை திமுக மொத்தமாக அள்ளும் என்றே சில கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+