லீகல் டீமிற்கு போன போன்.. விஜய்க்கு செக் வைக்கும் ஸ்டாலின்? படையை திரட்டும் ரஸ்தோகி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரம் இந்த மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி.. தனது அணியில் ஆள் சேர்த்து வருகிறார்.

ஆனால் இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. சிபிஐ விசாரணை நேர்மையாக நடக்காது.முக்கியமாக விஜய் தரப்பு அஜய் ரஸ்தோகி தரப்பை பார்ப்பது விசாரணையை பாதிக்கும் என்றும் தமிழக அரசு வாதம் வைக்க உள்ளதாம். உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TVK Vijay

கரூர் சிபிஐ வழக்கின் விசாரணை கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது குறித்து உரிய சட்ட ஆலோசனை பெற்று நிச்சயமாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளது. இந்த கருத்து தமிழ்நாட்டு மக்களுக்கே வேதனைக்குரிய ஒன்றாக அமைந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

யார் இந்த முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ விசாரணை கேட்கவே இல்லை

இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி தாங்கள் மனுத் தாக்கல் செய்யவே இல்லை என உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வாதம் வைத்து உள்ளன. இதனால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பத்தைப் பிரிந்துச் சென்ற, தங்களுக்கு தொடர்பில்லாத பன்னீர்செல்வம் பணத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின் தாயார் சர்மிளா என்பவரும், தன்னை ஏமாற்றி கையொப்பம் பெறப்பட்டதாக செல்வராஜ் என்பவரும் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் காணொளியில் செல்வராஜ் ஆஜராகி உள்ளார். தன்னை ஏமாற்றி கையொப்பம் பெற்றுவிட்டதாக செல்வராஜ் அந்த காணொளியில் குறிப்பிட்டு உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் முறைகேடு நடந்துள்ளதால்.. இதை பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அதிகாரிகள் இருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+