தென் மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை வெல்லும்.. மாலை முரசு தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பு
சென்னை: தென்மாவட்டங்களில் பெரியகுளம், கம்பம், மதுரை தெற்கு, மதுரை கிழக்கு உள்பட பல்வேறு தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளதாகவும், பரமக்குடி, சோழவந்தான், மதுரை தெற்கு உள்ளிட்ட ஒரு சில தொகுளில் அதிமுக முன்னிலையில் உள்ளதாகவும் மாலைமுரசு தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது, கோவில்பட்டியில் அமமுகவின் டிடிவி தினகரன் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் எந்த கட்சி, எந்த தொகுதியில் வெற்றி பெறும் என்பது குறித்து மாலை முரசு தொலைக்காட்சி கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது.
நேற்றும் இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 52 தொகுதிகளுக்கு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அந்த கணிப்பில் திமுக கூட்டணி 34 இடங்களில் வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 11 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளது. அமமுக ஒரு இடத்தில் வெல்லும் என்றும் திமுக அதிமுக இடையே ஆறு இடங்களில் இழுபறி நீடிக்கும் என்றும் மாலை முரசு தொலைக்காட்சி கூறியிருந்தது.

நெல்லை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையம் கோட்டை தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபுரம் தொகுதி , விளவங்கோடுயில் திமுக முன்னிலை பெறுமாம். ராமநாதபுரம், திருச்சுழி(விருதுநகர்), முதுகளத்தூர், அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கம்பம், ஒட்டப்பிடாரம் சங்கரன் கோவில் ,குளச்சல், நாகர்கோவில், நாங்குநேரி, ஆலங்குளம் போன்ற தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறியிருந்தது.

வெற்றி வாய்ப்பு
இதேநேரம் வாசுதேவநல்லூர், கடையநல்லூர், பரமக்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, உசிலம்பட்டி, போன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளதாகவும், திருவாடனை, திருநெல்வேலி, போன்ற தொகுதிகளில் இழுபறி உள்ளதாவும் மாலை முரசு கூறியிருந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலையில் இழுபறி உள்ளதாக கூறியுள்ளது.

காரைகுடியில் கடினம்
இதனிடையே கோவில்பட்டியில் மட்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் மாலை முரசு தெரிவித்துள்ளது. இன்றும பல தொகுதிகளுக்கு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது. காரைக்குடியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்றும், சாத்தூரில் திமுக வெல்லும் என்றும் கணிப்பில் கூறியுள்ளது,

இழுபறியில் பாஜக தலைவர்கள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடும் ராஜபாளையத்தில் திமுக வெல்லும் என்றும் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் பெரியகுளத்தில் திமுக வெல்லும் என்றும், ஆண்டிபட்டியில் இழுபறி நீடிக்கும் என்றும் மாலைமுரசு கணிப்பில் கூறப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் அதிமுக வெல்லும் என்றும், அமைச்ச்ர் உதயகுமார் போட்டியிடும் திருமங்கலத்தில் அதிமுக வெல்லும் என்றும் கூறியுள்ளது. மதுரை மத்தியில் (பிடிஆர் பழனிவேல் ராஜன்) திமுக வெல்லும் என்றும, மதுரை தெற்கில் அதிமுக வெல்லம் என்றும் கணிப்பில் கூறியுள்ளது. டாக்டர் சரவணன் போட்டியிடும் மதுரை வடக்கில் இழுபறி உள்ளதாகவும் கூறியுள்ளது. நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலியில் இழுபறி உள்ளதாகவும் கணிப்பில் கூறியுள்ளது

தலைவர்கள் கண்டனம்
இதனிடையே கருத்துக்கணிப்பு வெளியிட்ட மாலைமுரசு தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் இருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாலை முரசு தொலைக்காட்சியை அரசு கேபிளில் முடக்குவது கண்டனத்திற்கு உரியது என்று பத்திரிக்கையாளர் இந்து என் ராம் கூறியுள்ளார். மேலும் முத்தரசன், மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் மற்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications