'Do and Die'.. முதல்வர் ஸ்டாலின் கூறிய புது மொழி.. டுவிட்டரில் செம வைரல்.. தூள் பறக்கும் ட்வீட்கள்!
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மழை, வெள்ள காலத்தில் துரித பணியை மேற்கொண்டு அனைவரது பாராட்டையும் அள்ளினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில் நேற்று சென்னை மாதவரத்தில் நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முதல்வர் பேசிய பேச்சுதான் இப்போது டுவிட்டரில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அரசு ஊழியர்கள் மாநாடு
திமுக ஆட்சி இருக்கும்போது அரசு ஊழியர்களுடைய பொற்கால ஆட்சியாக எப்போதும் அமைந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் அமையும் என்று சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களது முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.

'Do and Die'
நான் எப்போதுமே அதிகம் பேசமாட்டேன். ஆனால் செயலில் நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆங்கிலத்தில் 'Do or die' அதாவது 'செய் அல்லது செத்து மடி' என்ற ஒரு வார்த்தை உண்டு. என்னைப் பொருத்தவரை அது Do and Die. அதாவது செய்து முடித்துவிட்டுத் தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியபோது அரசு ஊழியர்களின் கைதட்டல் அடங்க வெகு நேரமானது.

ஹேஸ்டேக் டுவிட்டரில் வைரல்
முதல்வர் ஸ்டாலின் கூறிய புது மொழியான 'Do and Die' என்ற வார்த்தை ஹேஸ்டேக் டுவிட்டரில் இப்போது வரைலாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கை வைத்து நெட்டிசன்கள் மு,க,ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். அதாவது திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட இணையதள வாசிகள் சிலர் 'முதல்வர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்' என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ராஜா என்பவர் வெளியிட்ட ட்வீட்டில், '' செய், செய்துவிட்டு மடி" என்று தலைவர் ஸ்டாலின் சொல்லியதின் விளக்கம்.. ''செய், செய்து கொண்டே வாழ், இலக்கை எட்டு, சாகாதே. இதைத்தான் நம் தலைவர் Do or Die க்கு மேட்சாக "Do and Die" என்று சொல்லியுள்ளார். Do or Die , செய் அல்லது செத்துமடி என்பது பாதுகாப்புத் துறையினருக்கு பொருந்தும்;; என்று கூறியுள்ளார்.

சுனாமி போன்றது
''முதல்வர் கூறிய Do and Die என்ற வார்த்தை சுனாமி போன்றது. அனைவருக்கும் ஊக்கம் அளிக்க கூறியது என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே வேளையில் இதற்கு எதிர்கருத்துக்களும் இல்லாமல் இல்லை. 'Do or Die' என்பது சரியே..செய்துவிட்டு, செய்த காரியத்தை வெற்றியடைய செய்துவிட்டு இறக்க வேண்டிய அவசியம் என்ன...'' என்றும் கருத்துக்கள் பலவிதமாக வந்து கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications