வீரன் உள்பட 4 வகை பிராண்ட்களை விற்க வேண்டாம்! டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு! மது பிரியர்கள் ஷாக்
சென்னை: மதுவில் 'ஆல்கஹால்' அளவு குறைவாக உள்ளதால் வீரன் உள்பட நான்கு வகை மதுபானங்களை விற்க வேண்டாம் எனவும் ஸ்டாக் இருந்தால் திருப்பி அனுப்புமாறும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசின் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன.

எனினும், அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்தும் மதுபானங்கள் பிளாக்கில் தொடர்ந்து விற்கப்படுவதாகவும், 18 வயதைக் கடக்காத சிறுவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் உள்ளன. அதேபோல டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் சில சரக்கில் வீரியம் இல்லை என்பதும் மதுபிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.
இன்னொரு பக்கம் டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. எனினும், மதுக்கடைகளை படிப்படியாக மூட திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய வகை சரக்குகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீரன் என்ற பெயரில் மதுபானம் விற்பனை செய்யப்படது.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதை ட்ரோல் செய்யவும் தொடங்கினர். இந்த நிலையில் தான், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ட்ரோபிகானா வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, ஓல்டு சீக்ரெட் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகியவற்றை வாங்கி குடிக்கும் போது போதை ஏறுவதில்லை என்றும் எவ்வளவு மது அருந்தினாலும் 'சப்பென்று' இருப்பதாக மது பிரியர்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இந்த 3 வித மதுபானங்களின் தரத்தை ஆய்வு கூடத்தில் பரிசோதித்த போது, அதில் 3 வித மது பானத்திலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதுவில் ஆல்கஹால் அளவு என்பது 42.84 % இருக்க வேண்டும். அதைவிட குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால் அதை கடைகளில் விற்கக் கூடாது.
இதனால், ஆல்கஹால் அளவு குறைவாக உள்ளதால், வீரன் ஸ்பெஷல் பிராந்தி (பேட்ச் எண் 082/2024) வி.எஸ்.ஓ.பி. ட்ரோபிகானா (பேட்ச் எண். 013/2020), ஓல்டு சீக்ரெட் பிராந்தி (பேட்ச் எண். 837/2018) ஆகியவை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த வகை மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருந்தால் அதை மதுபான கிடங்குக்கு திரும்ப அனுப்புமாறு கடைக்காரர்களை டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் இருந்து கடை ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறும் போது, "மது பிரண்ட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆல்கஹால் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அந்த மது வகை விற்பனைக்கு தகுதியற்றதாக எடுத்துக் கொள்ளப்படும். மது வகைகளின் தரத்தை தெரிந்து கொள்ள அவ்வப்போது, மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படும். தற்போது, 4 மது வகைகளின் குறிப்பிட்ட பேட்ச் எண் உடைய மது வகைகளில், ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால், திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது " என்றார்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications