சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் பயணிகளிடம் கோபமாக, இழிவாக பேசக்கூடாது..அன்பா பேசுங்கள் - டிரைவர், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவு

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ , இழிவாகவோ ஓட்டுநர், நடத்துனர் பேசக்கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ , இழிவாகவோ பேசக்கூடாது என போக்குவரத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும் , அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 7 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பின்னர் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெண் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் பயணம் செய்யும் மகளிரிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளளது.

தொற்றுக்கு எதிராக பயன்படும்.. 'சானிடைசர்' கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு.. 9 பேரை தூக்கிய போலீசார் தொற்றுக்கு எதிராக பயன்படும்.. 'சானிடைசர்' கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு.. 9 பேரை தூக்கிய போலீசார்

போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, சாதாரண கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பயணி நின்றாலும், அவருக்காக பேருந்தை நிறுத்தி ஏற்ற வேண்டும் எனவும் பேருந்தில் இடமில்லை என்று மகளிர் பயணிகளை இறக்கிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மகளிரிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

மகளிரிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " தமிழக முதல்வர், 7.5 .2021 அன்று சாதாரண கட்டணம் வசூலிக்கும் மாநகர நகர பேருந்துகளில் , மகளிர் கட்டணமின்றி 8.5.2021 முதல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் பயணம் செய்யும் மகளிரிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

1 பயணி நின்றாலும்

1 பயணி நின்றாலும்

பயணிகள் பேருந்து நிற்கும் போது, பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுனர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ , தாண்டியும் நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

இறக்கி விடக்கூடாது

இறக்கி விடக்கூடாது

நடத்துனர் வேண்டுமென்றே பேருந்தில் இடமில்லை என்று எழும் பெண் பயணிகளை பேருந்திலிருந்து இறங்கி விடக்கூடாது.
வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

அன்பாக பேசுங்கள்

அன்பாக பேசுங்கள்

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ , இழிவாகவோ பேசக்கூடாது. பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும் , அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்

வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள்

பெண் பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுனருக்கு சமிக்கை செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும் என்று இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி அனுப்பி வைத்துள்ளார்.

English summary
The Tamil Nadu government has issued an order that the driver and conductor should not speak angrily, mockingly or insultingly to female passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X