ராஜ்பவனை விட்டு ஆளுநர் வெளியே வரக்கூடாது என நினைக்கிறார்களா? கடுகடுத்த வானதி சீனிவாசன்
சென்னை: வேற எதோ காரணத்திற்காக, கவர்னரை எதிர்ப்பதற்காக கவர்னர் திருப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்க மத்திய உள்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கிடப்பில் வைத்து இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது.
முன்னதாக இந்த தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பாஜக எம் எல் ஏக்கள், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இப்படி செய்கிறார்கள்.
மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, ஒவ்வொரு நாளும் சென்னையில் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்சுகள் போராட்டம்.. என பல பிரச்சினைகளை மக்கள் எல்லாம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக தான் இது போல செய்கிறார்கள்..
விவசாயி மீது போராட்டத்துக்காக குண்டாஸ் போடுகின்ற ஒரு அரசாங்கத்தை இங்கே தான் பார்க்க முடியும். இதனை முதல்வர் ரத்து செய்கிறார் என்றால், முதல்வருக்கு கீழே நிர்வாகம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது? இதையெல்லாம் மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக.. ஆந்திராவோ, கர்நாடகாவோ தெலுங்கானாவோ, மாநில அரசுடன் கன்சல்டேஷன் பிராசஸ் இருக்கிறது.
அது இங்கேயும் இருக்கிறது. இங்கேயும் அதனை எடுக்கவில்லை. இவர்கள் ஒரு இணக்கமான ரிலேசன்சிப்பை வைக்காமல் அதற்கு ஆளுநர் மீது குறை சொல்வது அர்த்தமே இல்லை. இது மட்டுமின்றி கவர்னர் பாடம் நடத்துகிறார்.. கவர்னர் பொதுவிழாவில் பேசுகிறார் என்று. என்ன நினைக்கிறாங்க?.. ஆளுநர் வெளியில் வரக்கூடாதா?.. கவர்னர் ராஜ்பவனை விட்டு வெளியில் வரக்கூடாது என்று நினைக்கிறார்களா?..
பெட்ரோல் குண்டு வீசுகின்ற கலாசாரத்தை எல்லாம் இவங்க தான் கொண்டு வராங்க.. கவர்னர் அரசாங்கத்தோடு கன்சல்ட் செய்து பண்ணக்கூடியவை எல்லாம் இதுவரை நல்லா தான் போயிக்கொண்டு இருந்தது. ஆனால் இவங்க வேற எதோ காரணத்திற்காக, கவர்னரை எதிர்ப்பதற்காக கவர்னர் திருப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications