நீங்கள் மாத சம்பளம் வாங்குறீங்களா? இஎம்ஐ இருக்கா.. ஏப்ரலில் இப்படி சிக்கல் வரலாம்!
சென்னை: நீங்கள் மாத சம்பளம் வாங்குறீங்களா? உங்களுக்கு மாதம் மாதம் இஎம்ஐ கட்ட வேண்டிய நிலை இருக்கிறதா? வழக்கத்தைவிட இந்த ஏப்ரல் மாதம் வித்தியசமான சிக்கலை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு தகுந்தாற் போல் முன்னெச்சரிக்கையாக இருங்கள்.
பலரும் மாத சம்பளம் வாங்கித்தான் வாழ்க்கைய ஓட்டுகிறார்கள். ஒன்றாம் தேதி சம்பளம் வந்தாலே அடுத்த ஒரு வாரத்தில் சம்பளமே காலியாகி கடனில் போய் நிற்கும். சிலருக்கு 31ம் தேதி அல்லது 30ம் தேதியே சம்பளம் போட்டுவிடுவார்கள்.. அவர்கள் 2ம் தேதியே மொத்த பணத்தையும் தீர்த்துவிட்டு கவலையுடன் ஏடிஎம் கார்டை பார்ப்பார்கள்.

இப்போது தானே சம்பளம் வாங்கினேன்..அதற்கு இவ்வளவு செலவா என்று அதிரவைக்கும் அளவிற்கு இன்று செலவுகள் இருக்கிறது.. அதுவும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வேலை செய்வோர் வீட்டு வாடகை என்ற வகையில் மட்டும்பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
அதாவது வாடகையாக மட்டுமே குறைந்தது 10000 முதல் 12000 வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும். மளிகை செலவுக்கு 5000 ரூபாயும், பால் மற்றும் குழந்தைகளுக்கு சிறுதீனியாக மட்டும் குறைந்தது 4000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
இதுதவிர வாரம் ஒரு முறை அசைவம் எடுக்க ஆயிரம் என்ற வகையில் 4000, அன்றைக்கு சும்மா வெளியில் சென்றால் அதற்கு ஒரு ஆயிரம் என்ற வகையில் ஒரு 4000, செல்போன் வாங்கிய கையில் இஎம்ஐ ஒரு 4000 ரூபாய், 4 பேர் ஓரு குடும்பத்தில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் இரண்டு பேருக்கு மாதம் ஒரு முறை உடை எடுத்தாலே அதற்கு ஒரு 2500 ரூபாய், கல்வி கட்டணம் என்கிற வகையில் மாதம் கணக்க்கிட்டால் குறைந்தது 6000 ரூபாய் (இரண்டு குழந்தைக்கு) கட்ட வேண்டியதிருக்கும்.. இதுதவிர மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊர் சென்று வந்தால் அதற்கு ஒரு 3000, வேறு ஏதாவது கடன் வாங்கி இருந்தால், அதாவது கட்டில், மெத்தை அல்லது டிவி,, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அல்லது தனிநபர் கடன் என ஏதாவது ஒரு வகையல் இருந்தால் அதற்கு ஒரு 3000 ரூபாய் அல்லது 4000 ரூபாய் கட்ட வேண்டியதிருக்கும்.
தனிப்பட்ட செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் என 3000 ரூபாய், கரெண்ட் பில் ஒரு மாத கணக்கிற்கு 1000 ரூபாய், சிலிண்டர் 1000 ரூபாய் என சராசரி வாழ்க்கைகு கிட்டத்தட்ட 50000 ரூபாய்க்கு மேல் சர்வசாதாரணமாக செலவு ஆகும். இதில் யாராவது இடம் வாங்கவோ, வீடு கட்டவோ கடன் வாங்கிஇருந்தால் கண்டிப்பாக அவர்கள் சம்பளம் குறைந்து இந்த வாழ்க்கை வாழவே 75000க்கு மேல் இருக்க வேண்டும்.. அப்போது தான் கையைக்கடித்தபடியாவது வாழ்க்கை ஓடும்.. இல்லாவிட்டால் கண்டிப்பாக பெரிய சிக்கலை சென்னை வாழ் குடிமகன் சந்திப்பார்.
நிலைமை இப்படி இருக்க.. மாத சம்பளம் தாமதம் ஆனால் இஎம்ஐ கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.. அதற்கு வேறு அபராதமாக 750 முதல் 950 வரை தனியார் நிதி நிறுவனங்களை பொறுத்து கட்டணம் வசூலிப்பார்கள். சிபில் வேறு அடியாகிவிடும்.. சரி விஷயத்திற்கு வருவோம்.. வழக்கமாக 30ம் தேதி, 31ம் தேதி உங்களுக்கு சம்பளம் வந்துவிடுமா.. அல்லது ஒன்றாம் தேதியானால் சரியாக சம்பளம் வந்துவிடுமா... இந்த ஏப்ரல் மாதம் அதற்கு வாய்ப்பு மிக குறைவு.. பல நிறுவனங்களில் சம்பளம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
எனவே 2ம் தேதி உங்களுக்கு இஎம்ஐ வரும் என்றால் முன்கூட்டியே அதற்கான பணத்தை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்... ஏனெனில் மார்ச் 30ம் தேதி சனிக்கிழமை, மார்ச்31ம் தேதி ஞாயிறு வருகிறது.. அடுத்ததாக ஏப்ரல்1ம் தேதி திங்கள் அன்று வருகிறது. பொதுவாக அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையாக இருக்கும். அப்படியான சூழலில் முன்கூட்டிய சம்பளத்தை நிறுவனங்கள் வங்கிகளுக்கு அனுப்பிவிடுவார்கள்.. ஆனால் இந்த முறை தொடர்ந்து அப்படி அனுப்ப வாய்ப்பு இல்லை...மார்ச் 31ம் தேதியுடன் கணக்கினை முடிக்கும் வேலைகளில் வங்கிகள் பிஸியாக இருக்கும்..
எனவே உங்கள் சம்பளம் 2ம் தேதி அல்லது அதன் பின்னரே கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் நிறுவனத்தை பொறுத்து தேதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.. எனவே இஎம்ஐ கட்ட வேண்டியது இருந்தால் அதற்கு மாற்று ஏற்பாடுகளுடன் தயாராக இருங்கள்.. இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் தெரியவந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.. ஏனெனில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது.. எனவே உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படக்கூடும்.. மார்ச் 30ம் தேதிக்குள் அதற்கு தயராக இருங்கள்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications