இன்று கோயம்பேடு, தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போறீங்களா? போலீசார் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் கோயம்பேடு பகுதியில் நெரிசலைச் சமாளிக்க போக்குவரத்து போலீஸார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தற்போது கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் சென்னை மக்கள், ஒரு பக்கம் ஜவுளிக்கடைகள் புத்தாடைகள் வாங்க குவிந்து வருகிறார்கள். மறுபக்கம் சொந்த ஊருக்கு செல்லவும் தயாராகி வருகிறார்கள்..

தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்சிரோடு ஆகிய இடங்களில தான் பெரும்பாலான மக்கள் சென்னையில் ஜவுளி எடுக்க செல்வார்கள், தென்சென்னையில் தியாகராய நகர் என்றால், வடசென்னையில் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை தான பேமஸ். இதுதவிர தாம்பரம் பகுதியை பொறுத்தவரை குரோம்பேட்டை பகுதியும் வர்த்தக ரீதியாக அதீதமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் சென்னையில் செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது.
வாகன நெருக்கம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பூக்கடையிலிருந்த பட்டாசு கடைகள் அனைத்தும் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புரசைவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் காலியான ஆட்டோக்கள் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நெரிசல்குறைந்த இடத்துக்கு வந்துவிட்டு அங்கிருந்து ஆட்டோபயணத்தை மேற்கொள்ளலாம். மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
தி.நகர் பகுதியில் சோமசுந்தரம் பூங்கா தியாகராயா ரோடு, தணிகாசலம் ரோடு, மகாலட்சுமி தெருவில் உள்ளநாச்சியார் சாலை மற்றும் மோதிலால் தெருவில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் போன்ற நிறுத்தங்கள் போக்குவரத்து காவல் துறையால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புரசைவாக்கத்தில் நாராயணகுரு சாலை மாநகராட்சி திடல், அழகப்பா ரோட்டில் ஈவார்ட்ஸ் பள்ளி, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஈ.எல்.எம். பள்ளி திடல் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவிப்பில் கூறியுள்னர்..
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications