2 கேஸ் சிலிண்டர்கள் இருக்கா? ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா? ரேஷன்தாரருக்கு ஒரு குட் நியூஸ்
சென்னை: புதிய ரேஷன் கார்டுகள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இது குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்ப ரேஷன் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன.. அதேபோல, 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.. இதைத்தவிர, புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளார்கள்..

உரிமைத்தொகை: எனினும் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை வழங்கும் திட்டம் காரணமாக, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது.. அதேசமயம், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
ஏனென்றால், 2 பேருக்கு ஒரு கார்டு வேண்டும் என்பதற்காகவே தாய்-தந்தையர் பெயரில் பலர் விண்ணப்பித்துள்ளார்களாம்.. அதாவது, ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து விடுகிறார்களாம்.. அதனால்தான், வீட்டில் கிச்சன் எத்தனை உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்திருந்தனர்.
விநியோகம்: இந்த ஆய்வுகள் முடிந்தநிலையில், ஒருசில மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளும் விநியோகிக்கப்பட்டன.. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், தற்காலிகமாக ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் முடிந்ததுமே புதிய அட்டைகள் அனைத்தும் வழங்கப்படும் என்றார்கள்.. ஆனால், அதற்குள்ளாகவே, கிட்டத்தட்ட 2.80 லட்சம் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதாம்.. அவையெல்லாம் பரிசீலிக்கப்பட்டும் வருகின்றன.
அதற்கேற்றவாறு, இந்த ஆகஸ்ட் மாதம் முதலே புதிய கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அதன்படியே தற்போது ஆகஸ்ட் மாதம் துவங்கிவிட்டது. இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் குறித்து, நல்ல செய்தி வெளியாகியிருக்கிறது.
சேமிப்பு கிடங்கு: தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டியில் நெல் சேமிப்புக் கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நெல்லின் தரம் மற்றும் சேமிப்புக் கிடங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது சொன்னதாவது:
"மழைக்காலம் துவங்கிவிட்டது.. எனவே, நெல் சேமிப்புக் கிடங்குகளில் நெல் நனைந்து வீணாகாமல் தடுத்திட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.. கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன..2.8 லட்சம் குடும்பத்தினருக்கு புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதம் முதலே வழங்கப்படும்" என்றார்.
பயிர்க்கடன்: கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கடன்களாக 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, வருகின்ற மாதங்களில் வழங்கப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஒப்பந்தம் போட தாமதமானதால் இப்போது போர்க்கால அடிப்படையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications