பிறப்பு சான்றிதழ் வச்சிருக்கீங்களா? 2026-க்குள் இதை செய்யலன்னா சர்டிபிகேட் செல்லாது.. கடைசி சான்ஸ்
சென்னை: பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளை அவை நடந்ததுமே பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டமாக உள்ளது. இது ஏற்கனவே நடைமுறையிலும் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது... 26.09.2026க்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளரும் கேட்டுக் கொண்டுள்ளார். அது என்ன?
குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப்பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

பிறப்பு சான்றிதழ் அவசியம்
பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது. 22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம் 30 நாட்களுக்கு மேல் ஒரு வருடத்துக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது. பிறப்பு சான்றிதழ்கள் ஒருவரின் அடையாளத்துக்குரிய முக்கிய ஆவணமாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்கவும், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேருவதற்கும், திருமணத்தைப் பதிவு செய்வதற்கும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் போன்றவற்றை பெறுவதற்கும் பிறப்பு சான்றிதழ் அவசியமாகிறது.
2026-க்குள் சரி செய்யணும்
அதனால்தான், பிறப்பு சான்றிதழ் பெறுவதை, எளிமைப்படுத்தி உள்ளது மத்திய அரசு. இந்த பிறப்பு சான்றிதழை, குழந்தைகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து தந்துவிடும்.
குழந்தையின் பெயரை கூறி, தேவையான ஆவணங்களை பிறப்பு பதிவாளரிடம் வழங்கி சேர்த்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசுப்பணிகளில் இணைவதற்கு என அனைத்திற்கும் இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியும் உள்ளது..
சென்னை மாநகராட்சி
இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் குழந்தைகளின் பிறப்பு பதிவு மற்றும் பெயர் சேர்த்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் சட்டப்பூர்வ உரிமை என்றும், பிறப்பு சான்றிதழ் குழந்தையின் குடியுரிமைக்கான முக்கிய ஆவணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 நாட்களுக்குள்
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவசமாக சான்றிதழ் பெறலாம். ஆனால், குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழாக கருதப்படும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதி மொழி அளித்து எந்த கட்டணமும் இல்லாமல் குழந்தையின் பெயரை சேர்க்கலாம். 12 மாதங்கள் கடந்த பின், 15 ஆண்டுகளுக்குள் பெயரை பதிவு செய்ய ரூ.200 கால தாமதக் கட்டணம் செலுத்தி சேர்க்கும் வசதி உள்ளது. பொதுமக்கள் சிரமப்படாத வகையில், இதுவரை பெயர் சேர்க்காத பிறப்பு பதிவுகளுக்கும் தமிழ்நாடு அரசு 26.09.2026 வரை சிறப்பு கால அவகாசம் வழங்கியுள்ளது.
15 ஆண்டுகள் கடந்தும் பெயர் பதிவு செய்யாமல் உள்ளவர்கள், பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்னை மாநகராட்சியின் பிறப்பு-இறப்பு பதிவு அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சி ஆணையாளர்
26.09.2026க்குள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல பெருநகர சென்னை மாநகராட்சியில் குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்தப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் உறுதிமொழி அளித்து எந்தவிதக் கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.
பிறப்புச் சான்றிதழ் பதிய கட்டணம்
ஒருவேளை 12 மாதங்கள் கடந்துவிட்டால், 15 ஆண்டுகளுக்குள் உரிய காலதாமதக் கட்டணமாக ரூ.200 செலுத்திப் பதிவு செய்திட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும், பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு, 15 ஆண்டுகள் முடிந்தும் பெயர் பதிவு செய்யாதவர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சிறப்பு வாய்ப்பாக 26.09.2026 வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. எனவே, 15 ஆண்டுகள் கடந்தவர்களும் இந்தத் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...!!












Click it and Unblock the Notifications