குறிஞ்சி இல்லம் குலுங்குதே.. சென்னைக்கு படையெடுக்கும் "தலை"கள்.. திமுகவில் திடீர்னு மாற்றம்.. சபாஷ்
சென்னை: தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுகவில் நாளுக்கு நாள் புது புது அதிரடிகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில், இன்றைய தினமும் ஒரு நிகழ்வு நடக்க போகிறது.. இது தொடர்பாக ஒரு பிரத்யேகமான செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது. என்ன தெரியுமா?
தமிழகத்தில் தேர்தல் திருவிழா என்றாலே, பிரச்சாரங்களை அலங்கரிப்பவர்கள் பெரும்பாலும் நட்சத்திர பேச்சாளர்களாகவே இருந்து வருகிறார்கள்.. முக்கியமாக, தமிழகத்தின் கிராம பகுதிகளிலும், மூலை முடுக்குகளிலும், இந்த பேச்சாளர்களாலேயே கூட்டம் கூடுவது அதிகம்.

அந்தவகையில், வாக்கு வங்கிகளை கணிசமாக உயர்த்துவதிலும், தங்கள் கட்சியை "கை" தூக்கிவிடுவதிலும், நட்சத்திர பேச்சாளர்களுக்கென தனி முக்கியத்துவம் திராவிட கட்சிகளில் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.
லிஸ்ட் : அமைச்சர்கள், கட்சியின் 2-ம் கட்ட தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என தனித்தனியாக லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கான சுற்றுப்பயண விவரங்களையும் தயார் செய்து, அதற்கு தேர்தல் ஆணையத்திடம் அத்தாட்சி கடிதத்தை பெறுவது ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கக்கூடிய வழிமுறையாகும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், "மாநிலம் முழுவதும் இவர்கள் என் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்வார்கள்" என்று ஒப்புதலை பெறுவதுதான் இதன் இந்த அத்தாட்சி கடிதத்தின் அர்த்தமாகும்..
ஆளுமைகள்: அந்தவகையில், தேர்தல் சமயத்தில், இதுபோன்ற பேச்சாளர்களை மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே சரியாக பயன்படுத்தி கொள்வார்கள்.. இவர்களிடம் எந்த பாரபட்சத்தையும் அவர்கள் காட்டியதில்லை. எல்லோருக்குமே சரிசமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார்கள்.
இதில், கருணாநிதி ஒருபடி மேலே சென்றுவிடுவார்.. யாராவது வரம்பு மீறி பேசினாலோ, அத்துமீறி நடந்தாலோ, அவர்களை உடனடியாக கண்டிக்கவும் செய்வார். பகிரங்கமாக அறிக்கையும் விட்டு, சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கவும் செய்வார்.
பேச்சாளர்கள் : ஆனால், தற்போது இரு தலைவர்களுமே மறைந்துவிட்ட நிலையில், பேச்சாளர்களிடம் ஒருவித சுணக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.. "அம்மா இருந்திருந்தா எங்களை இப்படி கைவிட்டிருப்பாங்களா?" என்று ஏக்கத்துடன் அதிமுக தரப்பில் சிலர் புலம்பி கொண்டிருக்கிறார்களாம்..
அதேபோல, திமுகவிலும் இந்த பொருமல் வெடித்து வருகிறது.. கடந்த 2 வருடங்களாகவே தங்களுக்கான முக்கியத்துவம் தரப்படவில்லை, அங்கீகாரம் தரப்படவில்லை என்றெல்லாம் புலம்பல்கள் எழுந்தபடியே இருந்தன.
இந்த அதிருப்திகளை தீர்க்கவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சி எடுத்துள்ளார்.. அதன்படி, திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் உட்பட கட்சியின் பேச்சாளார்கள் அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி, அன்பளிப்பு வழங்க முடிவு செய்திருக்கிறாராம்.. எனவே, அவர் வசிக்கும் அமைச்சர் பங்களாவான "குறிஞ்சி இல்லத்தில்" இன்று மாலை அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
அறிவாலயம்: இதற்காக, பேச்சாளர்கள் அனைவரும் சென்னைக்கு இன்று வரவேண்டும் என அறிவாலயத்தில் இருந்து பேச்சாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளன. இதை கேள்விப்பட்டதுமே குஷியான திமுக பேச்சாளர்கள், சென்னையை நோக்கி வெளியூர்களில் இருந்து கிளம்பி வர ஆரம்பித்துவிட்டார்களாம்.
கட்சி தொண்டர்கள் எந்த வகையிலும் அங்கீகரிக்கப்படவில்லை என்கிற ஆதங்கமும் அதிருப்தியும் அதிகரித்து வரும் நிலையில் அதனை களைவதற்கான முயற்சியாக இது கவனிக்கப்படுகிறது..
மகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, விரைவில் தேர்தல் வரப்போகிறது.. களப்பணிகளும் துரிதமாகி உள்ள நிலையில், திமுகவின் ஆணிவேர்களாக கருதப்படும் பேச்சாளர்களின் பங்களிப்பும் அவசியமானதாக உள்ளது.. அதனால்தான், அவர்களின் மனக்குறையை போக்கும் நிகழ்வு, இன்றைய தினம் "குறிஞ்சி இல்லத்தில்" நடப்பதாக கூறப்படுகிறது.. இதனால், உதயநிதிக்கான முக்கியத்துவம் கட்சியில் மேலும் கூடிவருவது கவனிக்கத்தக்கது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
நான் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறினால் நெருப்பில் குதித்து சாவேன்.. துரைமுருகன் ஆவேசம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி











Click it and Unblock the Notifications