நிலத்தை பத்திரப்பதிவு செய்தால்.. சொத்து உங்களுடையதாகிடுமா? பட்டாவை விடுங்க.. அதென்ன சொத்து மாற்றம்?
சென்னை: ஒரு நிலத்தை பதிவு செய்வதால் மட்டுமே அதன் உரிமையாளராகிவிட முடியுமா? பத்திரப்பதிவு செய்ததும் சொத்து உங்களுடையது ஆகிவிடுமா? சொத்து மாற்றம் என்றால் என்ன? இதுகுறித்து சட்டம் சொல்வது என்ன?
வீடு, அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்கிவிடுவதாலேயே, அது உங்களது சொத்து என்று முழுமையாக சொல்லிவிட முடியாது.. ஏனென்றால், சொத்துக்களை வாங்கி நீங்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் அனுபவித்தாலும்கூட, அதை முறையாக பதிவு செய்ய வேண்டும்..

பதிவுச்சட்டம்: இந்திய பதிவுச்சட்டத்தை பொறுத்தவரை, ரூ. 100 மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது விதியாக உள்ளது.. எனவே, வீடு, கடை, ப்ளாட் அல்லது பண்ணை என எது வாங்கினாலும், அதனை பதிவு செய்ய வேண்டும்.
இப்படி பதிவு செய்து அதற்கான பட்டாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.. இந்த பட்டாவை நங்கள் வைத்திருந்தால் மட்டுமே அது உங்களுடைய முழுமையான சொத்தாக கருதப்படும்.. இந்த பட்டாக்கள் வருவாய்த் துறை சார்பில் தரப்படுகிறது.. இதற்கு முதலில், நீங்கள் சொத்துக்களை வாங்கும் பகுதியிலுள்ள விஏஓ என்று சொல்லப்படும் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு தந்து பெற வேண்டும்.
ஆவணங்கள்: அந்த மனுவுடன், சொத்து மற்றும் உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அடையாள ஆவணங்களின் நகல்களையும் இணைத்து வழங்கினால் அம்மனுவின் மீது விஏஓ அறிக்கை ஒன்றை தருவார். அந்த அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட மண்டலத் துணை தாசில்தாரிடம் ஒப்படைப்பார்..
பிறகு அனைத்து ஆவணங்களையும் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, மனுதாரருக்குப் பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார்கள். இந்த பணிகள் முடிந்ததுமே பட்டா மாற்றம் செய்ய வேண்டும். இந்த பட்டா ஆவணம்தான், உங்களுடைய சொத்து அடையாள ஆவணமாகும்..
அதிகாரப்பத்திரம்: அதிகாரப்பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்க முடியும் என்பதால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.. மேலும், பிளாட் போட்டு மனைகளை விற்க நேர்ந்தால், தவறுதலாக அதில் உங்களது நிலமும் ஒதுக்கப்பட்டுவிடலாம்.
அதனால்தான், ஒரு சொத்தை பதிவு செய்யும் நபர், பத்திரப் பதிவு முடிந்ததுமே, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்கலாம்.
ஆனால், நிலத்தை பதிவு செய்தாலும், நீங்கள் அதன் உரிமையாளராகிவிட முடியாது... சொத்துக்களை தன்னுடைய மாற்றி எழுதுவது அதைவிட அவசியமாகும். இதற்குதான் சொத்து மாற்றம் என்பார்கள்.. அதாவது பத்திர பதிவை முடித்த பிறகு, அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால், அது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.
ஆவணங்கள்: எனவே, பதிவு செய்துவிட்டு, சரியான நேரத்தில் சொத்துக்களை மாற்றம் செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் அந்த சொத்தின் நீங்கள் உரிமையாளராக முடியும். இதனால், உங்கள் சொத்துக்களை யாராலும் விற்கவோ, உரிமை கொண்டாடவோ முடியாது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications