தருமபுரி அபிநயா.. இது பெரிய காரணமா இருக்கே? களத்தை மாற்றும் திமுக Vs பாமக.. வெலவெலன்னு விக்கிரவாண்டி
சென்னை: விக்கிரவாண்டியில் போட்டியிடுவதை அதிமுக புறக்கணித்துள்ளது.. இதற்கு திமுக மீது சில காரணங்களையும் கூறியிருக்கிறது. அதிமுக போட்டியிடாத நிலையில், விக்கிரவாண்டியின் தேர்தல் பரபரப்பு மேலும் எகிறிவருகிறது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. திமுக விவசாய தொழிலாளர் அணிச்செயலாளர் அன்னியூர் சிவா என்பவரை விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக திமுக அறிவித்திருக்கிறது..

புது தெம்பு: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் ரிசல்ட், பாஜகவுக்கு புது தெம்பை தந்துள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியிலும் போட்டியிட விரும்பியது. ஆனால், பாமகவும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டவும், பாமகவுக்கு விட்டுக்கொடுத்து பாஜக விலகி கொண்டது.
சீமானின் நாம் தமிழர் கட்சி, வழக்கம்போல இந்த தேர்தலையும் விடுவதாக இல்லை.. அவர்களும் களமிறங்குகிறார்கள்.. கைவிட்டு நழுவி சென்ற கரும்பு சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது மைக் சின்னத்திலேயே போட்டியிடுவதா? என்ற குழப்பத்தில் உள்ளார்கள்.. இதில், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா, மிகுந்த எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்த துவங்கிவிட்டார்..
லோக்சபா தேர்தல்: காரணம், தருமபுரி தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, 65,381 வாக்குகளை பெற்றதுடன் டெபாசிட்டை இழந்தவர் அபிநயா.. ஆனாலும், இப்போது மறுபடியும் இவருக்கு சீட் கொடுக்க காரணம், திமுகவுக்கு போட்டியை ஏற்படுத்தி, பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க, முக்கியமான காரணமாக இருந்தவராக அபிநயா கருதப்படுகிறார்.
விக்கிரவாண்டியில் 2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சி 534 வாக்குகளையும் பெற்று 7வது இடத்தை பிடித்தது.. 2019-ல் 2,921 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தது. 2021 தேர்தலில் 8,216 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தது.எனவே தொடர்ந்து வாக்கு வங்கி உயர்ந்து வருவதால் மிகுந்த நம்பிக்கையாக அபிநயாவை களமிறக்கியிருக்கிறது நாம் தமிழர் கட்சி.
பாமக: பாமகவை பொறுத்தவரை, எப்போதுமே இடைத்தேர்தல்களில் பெரிதாக போட்டியிடாது.. ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவை தந்துவிட்டு, ஒதுங்கிவிடுவது வழக்கமாகும். ஆனால், லோக்சபா தேர்தலில் ஒன்றில்கூட வெற்றி பெறாத நிலையில், மீண்டும் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க முயல்கிறது.
அதுமட்டுமல்ல, இந்த விக்கிரவாண்டி தொகுதி பாமகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி என்பதால், எப்படியும் விட்டதை பிடிக்க தயாராகி வருகிறது.அதனால்தான், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட ஆசைப்பட்ட பாஜகவும், பாமகவுக்கு விட்டுக்கொடுத்து பாஜக விலகி கொண்டது.
விக்கிரவாண்டி: ஆனால், அதிமுக திடீரென, விக்கிரவாண்டியில் போட்டியிடாமல் பின்வாங்கிவிட்டது... அதிமுக போட்டியிட்டிருந்தால், திமுக Vs அதிமுக என்று களம் மாறுமா? அல்லது திமுக Vs பாமக என களம் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும். ஆனால், இப்போது அதிமுக ஒதுங்கிவிட்டதால் திமுக Vs பாமக என்றே களம் அமைந்துள்ளது..
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இடைத்தேர்தல் என்றாலே, அது ஆளும் கட்சிக்கு சாதகமான முடிவையே பெற்றுத்தரும் என்பது எழுதப்படாத ரிசல்ட்டாக அமைந்து வருகிறது..
இந்த முறை இந்த கணக்கு உடைபடுமா ? என்று தெரியவில்லை.. மும்முனை போட்டி என்று சொன்னாலும், பாமகவுக்கும், திமுகவுக்குதான் நிஜமான போட்டி என்பதால், ஒவிக்கிரவாண்டியில் இன்றிருந்து விறுவிறுப்பு கூடியிருக்கிறது.. ளபொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications