அடித்து தூக்கிட்டாரே இளையராஜா.. வென்றது எப்படி? மஞ்சும்மல் பாய்ஸ் பணிந்தது எப்படி? இதுதான் நடந்தது?
சென்னை: கண்மணி அன்போடு காதலன் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்திய விவகாரத்தில்.. வழக்கு கோர்ட்டுக்கு செல்லாமலே முடிக்கப்பட்டு உள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. சரி எப்படி இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
அதற்கு முன் இளையராஜா தொடுத்த வழக்கு ஒன்றை பற்றி பார்க்க வேண்டும்.. இசையமைப்பாளர் இளையராஜாவின் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இசையமைத்ததற்கு இளையராஜா-விற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்துவிட்டதால் அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும் என கூறினார். தயாரிப்பாளரிடம் இருந்து உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகி விட்டதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பு என்பது க்ரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கும் சொந்தம் என்பது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர்.
மஞ்சும்மல் பாய்ஸ் வழக்கு: இந்த சூழலில்தான் மஞ்சும்மல் பாய்ஸ் குழு சிக்கினர். அவர்கள் இந்த இசை நிறுவனத்திடம் பாடலுக்கான அனுமதியை பெற்றனர். ஆனால் இளையராஜாவிடம் பெறவில்லை. இளையராஜாவோ.. அந்த நிறுவனத்திற்கு பாடலுக்கான அனுமதியே இல்லை என்றுவிட்டார்.
மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இந்தப் படம் பல மலையாளப் பெரிய படங்களைத் தாண்டி மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது. கேரளா மட்டுமின்றி நாடு முழுக்க பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்த படம் ஆகும் இது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்' என்ற ஐகானிக் பாடலை படக்குழு பயன்படுத்தியது. குணா கேவில் நடக்கும் இந்த படத்தின் கதையின் கிளைமேக்சில் அந்த பாடல் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
பாடல் ஹிட்: இந்த பாடல் படத்திற்கு ஒரு உணர்ச்சியாக அமைந்து இருந்தது. படத்திற்கு மிகப்பெரிய எழுச்சியாக.. அடையாளமாக அந்த பாட்டு இருந்தது. மேலும் இந்த தலைமுறை இசை ஆர்வலர்களிடையே பாடலை மீண்டும் பிரபலமாக்க காரணமாக அமைந்தது. ஆனால் குணா படத்தின் பாடலை பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இதற்காக அனுமதி கோரப்பப்படவில்லை.
இதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜா, மஞ்சும்மல் பாய்ஸ் உரிமையை பெறாததற்காக இழப்பீடு கோரி தயாரிப்பாளர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினார்.
எப்படி முடிக்கப்பட்டது: வக்கீல் நோட்டீஸ் கிடைத்ததும் மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்தனர். படத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு இளையராஜா இழப்பீடாக ரூ.2 கோடி கேட்டார்.
இறுதியாக ரூ.60 லட்சத்திற்கு ஒப்பந்தம் முடிவடைந்தது மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் அந்தத் தொகையை செலுத்தி சட்டச் சிக்கலைத் தீர்த்தனர். இதனால் வழக்கு விசாரணை கோர்ட்டில் நடத்தப்படாமல் நிவாரணத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. கோர்ட்டுக்கு போனால் வழக்கு நீண்ட காலம் நடக்கும் என்பதால் வெளியே தீர்த்துக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் திறமையான அணியை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆரம்பித்ததற்காக இளையராஜா மோசமாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால் அதே சமயம் அவரின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக படக்குழு மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இறுதியாக மஞ்சும்மல் பாய்ஸ் அணியை இளையராஜா வீழ்த்தி வென்றுள்ளார். தயாரிப்பாளர்களும் சட்டரீதியான தடைகளில் இறங்குவதற்குப் பதிலாக சிக்கலை பேசி தீர்க்க விரும்பினர். இதையடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் இறுதியாக ரூ.60 லட்சத்திற்கு ஒப்பந்தம் முடிவடைந்தது மற்றும்மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் அந்தத் தொகையை செலுத்தி சட்டச் சிக்கலைத் தீர்த்தனர்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications