அடேங்கப்பா கருணாநிதியின் நினைவிடத்தை இரவு நேரத்தில் கழுகு பார்வையில் பார்த்துள்ளீர்களா?எத்தனை அழகு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நாளை திறக்கப்படவுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் இரவு நேரத்தில் எப்படி இருக்கிறது தெரியுமா?
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நல பாதிப்பால் காலமானார். இதையடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்ய அப்போதைய அதிமுக அரசிடம் மெரினாவில் இடம் கேட்கப்பட்டது.

அதற்கு அதிமுக மறுத்துவிட்ட நிலையில் திமுக ஹைகோர்ட்டை நாடியது. இதையடுத்து கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய ஹைகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் இருந்து சென்னை மெரினாவுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அங்கு முழு அரசு மரியாதையுடன் அவருடைய முன்னாள் முதல்வர் அண்ணா சமாதிக்கு அருகே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தது.
அப்போது கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டவிதி எண் 110இன் கீழ் அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழக அரசு சார்பில் 2,21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. இது புதிய நினைவிடம் அல்ல, ஏற்கெனவே இருந்த நினைவிடம் புனரமைக்கப்பட்டு நாளை திறக்கப்படுகிறது. கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கருணாநிதியின் நினைவிடத்துடன் பேரறிஞர் அண்ணாதுரையின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிட பகுதியில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் கருணாநிதி முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அது 3 வளைவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சதுக்கத்தின் கீழே நிலவறை பகுதியில் கலைஞர் உலகம் என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கருணாநிதியின் எழிலோவியம் என்ற அறையில் அவரது இளமைக்காலம் முதல் அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள், அவருடைய ஆட்சியில் கொண்டு வந்தபல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் உள்ளன.
உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், சரித்திர நாயகனின் சாதனை பயணம் என தனித்தனி அறையில் கருணாநிதியின் பெருமையை எடுத்துரைக்கும் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்கள் இரவு நேரத்தில் எப்படி மின்னொலியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது தெரியுமா? இதை பார்த்து பலரும் வியந்து போகிறார்கள்.
கலைஞர் உட்காந்திருப்பது போன்றும் அது போல் அண்ணா உட்கார்ந்திருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் மின் அலங்காரத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications