2019ல் கனிமொழியை எதிர்த்து நின்ற தமிழிசை சௌந்திரராஜன் .. எத்தனை வாக்குகள் வாங்கினார் தெரியுமா?
சென்னை: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தமிழிசை சௌந்திரராஜன், 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட் தோல்வி அடைந்த நிலையில், அப்போது எத்தனை வாக்குகள் வாங்கினார் என்பதை இப்போது பார்ப்போம்.
தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சௌந்திராஜன், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வகையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று அண்மையில் செய்திகள் கசிந்தன.

அப்போது இதுபற்றி விளக்கம் அளித்த தமிழிசை, "ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது முற்றிலும் தவறான செய்தி. மேலிடம் என்ன உத்தரவிடுகிறதோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். எப்போதும் மக்களுக்காக நான் இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி வேலை செய்து வருகிறேன். எனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அப்போது கோபமாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் தான் இன்று தமிழிசை சௌந்திரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் தென்சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி அல்லது புதுச்சேரியில் தமிழிசை போட்டியிடலாம் என்று சொல்கிறார்கள்.. எந்த தொகுதி என்பதை அனேகமாக இன்னும் ஓரிரு நாளில் பாஜக மேலிடம் அறிவிக்கும் என தெரிகிறது.
இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.. தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 39 இடங்களில் தோல்வியை தழுவியது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
தமிழிசை சௌந்திரராஜன் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் களம் இறங்கினார். திமுகவின் கனிமொழியை எதிர்த்து களம் இறங்கிய தமிழிசை, அப்போது தீவிரமாக இறங்கி பிரச்சாரமும் செய்தார். ஆனால் ஸ்டெர்லைட் உள்பட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தமிழிசைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.. அப்போது பிரச்சாரத்தில் பேசிய இன்றைய முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடலாமா?. ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்னைகள் கொண்ட தூத்துக்குடிக்கு தோற்பதற்காக வந்தீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்..
கடந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் மொத்தம் உள்ள 14 லட்சம் வாக்குகளில் 9,91,263 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் கனிமொழி, தன்னை எதிர்த்து போட்டியிட தமிழிசையை விட 3,47,209 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் கனிமொழி 5,63,143 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் 2,15,934 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த தேர்தலில் கனிமொழி மொத்தம் 56.81 சதவீதம் வாக்குகள் பெற்றார். ஆனால் தமிழிசை 21.78% வாக்குகள் மட்டுமே பெற்றார்..
தேர்தல் முடிந்த உடன் தமிழிசை ஆளுநராக மாற்றப்பட்டார். இந்நிலையில தமிழிசை மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்பி இருப்பது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications