ஜப்திக்கு வந்த கண்ணதாசனின் வீடு! கண்களில் கண்ணீருடன் கவிஞர் எழுதிய அந்த சூப்பர்ஹிட் பாடல் என்ன?
சென்னை: பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் ஜப்திக்கு வந்த வீட்டை எண்ணி எழுதினார். அந்த பாட்டும் பயங்கர ஹிட்டானது. கடைசியில் வீட்டை மீட்டாரா இல்லையா என்பதை பார்ப்போம்.
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நம் வாழ்க்கையுடன் ஒன்றி போய் இருக்கும். காதல், கோபம், ஏமாற்றம், நகைச்சுவை, ஊடல், இறப்பு உள்ளிட்ட அனைத்து சூழல்களுக்கும் ஏற்றபடியான பாடலை எழுதியிருந்தார்.

குறிப்பாக சொல்ல போனால் குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சம்பவங்களுக்கும் அவர் பாட்டு எழுதியுள்ளார். இவர் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியவர். இவருக்கு கம்பரின் செய்யுளும் பாரதியாரின் பாடல்களும் என்றால் மிகவும் பிடிக்கும்.
கடைசி பாடல் : இவர் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற படைப்பையும் படைத்துள்ளார். இவர் எழுதிய கடைசி பாடல் மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே என்ற பாடலாகும். சிறுகதைகள், கட்டுரைகள். சுயவரலாறு, புதினங்கள், கவிதை நாடகம், சிற்றியலக்கியங்கள் காப்பியங்களை எழுதியுள்ளார்.
எம்ஜிஆர் நடிப்பில் ஊமையன் கோட்டை என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அப்போது எம்ஜிஆரும் கால்ஷூட் கொடுத்தார். ஆனால் அவர் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், மற்ற காட்சிகளை அந்த படக் குழு எடுத்து முடித்தது. இதையடுத்து எம்ஜிஆர் காட்சிகளுக்கு அவரை அணுகிய போது அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
இதனால் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. இதையடுத்து மனோரமாவை அறிமுகம் செய்து மாலையிட்ட மங்கை என்ற படத்தை தொடங்கினார். அந்த படமும் முடிந்த நிலையில் லாபம் இல்லாததால் தனது சகோதரர் சீனிவாசனுக்கு கொடுத்துவிட்டார். இப்படி இரு படங்களுமே தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்தன.
ஜாமீன் கையெழுத்து: இந்த நிலையில் யாரோ ஒருவருக்கு கண்ணதாசன் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். அந்த பணத்தை செலுத்தாததால் வீடு ஜப்திக்கு வந்தது. அந்த நேரம் பார்த்து பீம் சிங் இயக்கத்தில் பாவமன்னிப்பு படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. பாடல் எழுத உட்கார்ந்த கண்ணதாசனுக்கு ஒரு சோக செய்தி வந்தது.
உங்கள் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வீட்டு வாசலில் நிற்கிறார்கள் என்ற செய்தியை கேட்டதும் தனது சூழலும் கதையில் உள்ள சூழலும் ஒன்றுதான் என நினைத்த கண்ணதாசன், அப்போது எழுதியதுதான் "சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்" என்ற பாடல்.
ஹிட் பாடல்: இந்த பாடல் பெரும் ஹிட்டானது. பட்டிதொட்டியெல்லாம் பாடல் பரவியது. அது போல் கண்ணதாசன் குடித்துவிட்டுதான் பாட்டு எழுதுவார் என்று சொல்வதெல்லாம் பொய் என அவருடைய மகள் ரேவதி சண்முகம் ஏற்கெனவே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மதுவாலோ மாதுவாலோ பணத்தை இழக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். அப்பா குடிப்பார், ஆனால் காலையில் ஸ்டூடியோவிலிருந்து வரும் அவர் ஒரு கோப்பை சிறிய அளவு மது, நிறைய தண்ணீர் ஊற்றி குடித்துவிட்டு படுத்துவிடுவார். பிறகு மாலை எழுந்து வழக்கம் போல் ஸ்டூடியோவுக்கு சென்றுவிடுவார் என்பதையும் ரேவதி தெரிவித்துள்ளார்.
வீட்டை மீட்டாரா: அது போல் அவர் பேட்டிகளில் ஜாமீன் கையெழுத்து போட்டதால்தான் வீட்டை இழந்தோம் என சொல்லியுள்ளார். ஆனால் சிலர் பாவமன்னிப்பு படத்தில் எழுதிய பாடல் மூலம் கிடைத்த பணத்தை நீதிமன்றத்தில் கட்டியவுடன் வீட்டை கண்ணதாசன் மீட்டெடுத்தார் என்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் கண்ணதாசனின் மகள் சொல்லும் விளக்கத்தைத்தான் நாம் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications