"கிண்டி"யில் அனல்..சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
சென்னை: தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான முதலமைச்சரின் தனித் தீர்மானம் ஒருமனதாக இன்று பேரவையில் நிறைவேறியது.
நீண்ட நாள்களாகவே, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, தமிழக அரசுக்கே, 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மறுபடியும் திருப்பி அனுப்பியிருந்தார்..

ஆலோசனை கூட்டம்: இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இதுகுறித்து, தமிழக அரசு உடனடியாக ஆலோசனையிலும் இறங்கியது.. மறுபடியும் ஒரு சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டி, இந்த மசோதாக்களை எல்லாம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதன்படியே, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு சொல்லும்போது, "ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்படும்" என்று அறிவித்தார். இதற்காக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சுற்றறிக்கையுடன் நிகழ்ச்சி நிரலும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
சபை நடவடிக்கைகள்: அதன்படி, 10 மணிக்கு கூடியதும், சபாநாயகர் அப்பாவு சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்து நிகழ்ச்சி நிரலை எடுத்து சொல்வார்... இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்ட மசோதாக்களை ஒவ்வொன்றாக தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக்கொள்வார். இதையடுத்து, சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அமைச்சர்கள் அனுமதி கோருவார்கள்.
இதற்கு எம்.எல்.ஏ.க்கள் குரல் மூலம் "ஆம்" என்று சொன்ன பிறகு, சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். அப்போது அந்த மசோதா மீது யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால், ஆரம்ப கட்டத்திலேயே அதை எதிர்ப்பதாக பதிவு செய்வார்கள். இப்படி 10 மசோதாக்களும் தாக்கல் செய்து முடித்ததும் ஒவ்வொரு மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
திருத்தங்கள்: அப்போது மசோதாக்களில் ஏதாவது திருத்தம் வேண்டும் என்று விருப்பப்பட்டால் எம்எல்ஏக்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை முன் வைப்பார்கள்... உடனே, இதற்கு அமைச்சர்களும் விளக்கம் அளித்து, மசோதாவை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்வார்கள். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மசோதாவையும் சபாநாயகர் அப்பாவு, மெஜாரிட்டி அடிப்படையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற கோருவார்.. அதன்படியே, மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.
சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததுமே, சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்... அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
என்ன நடக்கும்?: பொதுவாக, சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில், அதே மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்... ஒருவேளை தாமதப்படுத்தினால், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக வேண்டிய நிலைக்கு தமிழக கவர்னர் தள்ளப்பட வாய்ப்புள்ளது
சட்டசபை கூட்டம்: இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் துவங்கியது.. சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சபை கூடியதுமே, உயிரிழந்த உறுப்பினர்கள், மூத்த தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.. அப்போது 2 நிமிடங்கள் அவையில் உள்ளவர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட சோதாக்களை, மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இறுதியில், ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான முதலமைச்சரின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறப்பட்டது. சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 10 சட்டமுன்வடிவுகளும் மறுஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications