2 கேஸ் சிலிண்டர் இருந்தால் "சிக்கல்" வந்துடுமே.. பொருளை மிஸ் பண்ணாதீங்க.. ஸ்மார்ட் கார்டினை பெற வழி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றுதான் ரேஷன் கார்டு.. இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா? ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆன்லைனிலேயே எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

ரேஷன் கார்டு தேவை என்கிறபோதுதான், அதை எப்படி விண்ணப்பிப்பது என்றே பலரும் அறிய முற்படுகிறார்கள்.. பொதுமக்களின் வசதிக்காகத்தான், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி உள்ளது.

விண்ணப்பம்: அதேபோல ஆன்லைனிலேயே புதிய ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பித்து கொள்ளலாம்.. அப்படி விண்ணப்பிக்கும் முன்பு, பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்களின் பெயரை நீக்க வேண்டும். அப்படி நீக்க வேண்டுமானால், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் தெரியுமா? ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்றவை இருந்தால்,

Do You know How to apply Ration card online in Tamil Nadu and What are the Formalities

ஆன்லைன் படிவம்: ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் ஆப்ஷன்கள் இருக்கும். அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், முதலில் https://www.tnpds.gov.in என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அங்கே "ஸ்மார்ட் கார்டு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஸ்கிரீனில் அப்ளிகேஷன் தோன்றும். அதை ஒவ்வொன்ற நிரப்ப வேண்டும்.

அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, உங்கள் கையிலுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.. நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB என்ற அளவிலும், png, gif, jpeg, pdf போன்றவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருக்க வேண்டும் என்பது அவசியம்.. இறுதியாக, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் உள்ளது என்ற தகவல்களை தர வேண்டும்.

கன்பார்ம்: இறுதியாக, "கன்பார்ம்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference Number கிடைக்கும், அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும.. இப்போது நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம், மற்றும் ஆவணங்கள், துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள்... அவர்கள் சரிபார்த்து முடித்ததுமே, ரேஷன் கார்டு நீங்கள் பதிவிட்டிருந்த வீட்டு முகவரிக்கு வந்துவிடும்.

இந்த ஆவணங்களை பூர்த்தி செய்யும்போது, எத்தனை கேஸ் சிலிண்டர்கள் உள்ளது என்று கேட்கப்படும். சிலிண்டர்கள் அதிகம் இருந்தால் புதிய ரேஷன் கார்டுகள் தரப்பட மாட்டாது. சமீபகாலமாகவே, புதிய ரேஷன் கார்டுகள், பலரும் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. ஆனால், ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் இன்னொரு கார்டு கேட்டும் விண்ணப்பித்து வருவதாக தெரிகிறது..

இதனால் உணவு வழங்கல் துறைக்கு புதிய கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் எக்கச்சக்கமாக பெருகிவிட்டதாம். எனினும், எல்லாருக்குமே கார்டுகளை தந்துவிடாமல், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என்பதையெல்லாம் அதிகாரிகள் முதலில் ஆய்வு செய்கிறார்கள்.. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரரின் முகவரிக்கு நேரடியாகவே சென்று, வீட்டை ஆய்வு செய்கின்றனர்.

Do You know How to apply Ration card online in Tamil Nadu and What are the Formalities

2 சிலிண்டர்கள்: அந்த வீட்டில் கிச்சன் ஒன்று உள்ளதா? அல்லது 2 உள்ளதா? அடுப்பு ஒரு அடுப்பா? 2 அடுப்பா? யார் பெயரில் உள்ளது? ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று பார்க்க துவங்கி உள்ளார்கள். இந்த ஆய்வு பணி முடியவே எப்படியும் 2 மாதம் ஆகும் என்கிறார்கள். அதற்கு பிறகே. விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்கிறார்கள்..!

அதேபோல, ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதன்படி, ஒரு ரேஷன் கார்டில் தொடர்ந்து 6 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றால், அந்த அட்டை ரத்து செய்யப்படும் என்பது அரசின் புதிய விதியாகும். பயன்படுத்தாத ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகத் தேவையுள்ள மற்றொரு ஏழைக் குடும்பத்துக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும்.

புதிய ரேஷன் கார்டுகள்: ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டால் அது செல்லாது. மேலும் ரேஷன் அட்டைகளின் புதிய விதிகளின்படி, அதனை அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+