ஆன்லைனில், பான் கார்டில் உள்ள பிழையை திருத்த முடியுமா? ரூ.110 ரெடியா இருக்கா? அப்ப உடனே இதை பண்ணுங்க
சென்னை: பான்கார்டுகளில், பிழைகள் ஏற்பட்டுவிட்டால், அந்த பிழைகளை நாம் ஆன்லைனிலேயே திருத்திவிடலாம்.. அதேபோல, புது பான்கார்டுகள் தேவையென்றாலும், ஆன்லைனிலேயே விண்ணப்பித்தால் போதும்.
ஒவ்வொரு நபருக்கும் பான்கார்டு மிகவும் அவசியம்.. வங்கிக் கணக்கு திறப்பதற்கும், கடனுக்கு விண்ணப்பிப்பதற்கும், வருமான வரித் தாக்கல் செய்யவும் என எல்லாவற்றுக்கும் பான் கார்டு அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது..
பிழைகள்: இந்த அளவுக்கு முக்கியமான சேவைகளுக்கு பான் தேவை என்பதால்தான், அதில் எந்தபிழையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள். ஒருவேளை பிழை இருந்துவிட்டால், அல்லது புது பான் கார்டு தேவையென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

- புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற வெப்சைட்டிறக்கு செல்ல வேண்டும்.
- பிறகு, விண்ணப்பத்தில் "Application Type" -> "Changes or Correction in Existing PAN card" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்..
- அப்போது தரப்படும் டோக்கன் நம்பரை, மறக்காமல் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.. இந்த டோக்கன் நம்பரைதான், மெயிலில் அனுப்ப வேண்டும்.
- திருத்தம் செய்ய வேண்டிய விவரங்களை பதிவிட்டபிறகு, அடையாள மற்றும் முகவரி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்டவைகளையும் குறிப்பிட வேண்டும்.
- அனைத்தும் பூர்த்தி செய்து முடித்த பிறகு, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். இதற்கு 110 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.. கட்டணம் செலுத்தியபிறக, திருத்தப்பட்ட பான் கார்டுகள், நீங்கள் விண்ணப்பத்தில், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.. ஒருவேளை, வெளிநாட்டு முகவரி என்றால் 1,020 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
2 கார்டுகள்: அதேபோல, ஒரே ஒரு பான்கார்டுதான் நாம் வைத்திருக்க அனுமதி உண்டு.. ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருந்தால், வருமான வரித்துறை உங்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்துவிடும்.. அத்துடன், 10,000 ரூபாய் வரை அபராதமும் விதித்துவிடும்... ஒருவரே 2 பான் கார்டுகளை வைத்திருக்க நிறைய காரணங்கள் இருக்கலாம்.
எனினும், இது சட்டப்படி தவறு என்பதால், உடனடியாக ஒப்படைத்துவிட வேண்டும். அதை எப்படி ஒப்படைப்பது தெரியுமா? ஆன்லைன் + ஆஃப்லைன், இந்த இரண்டிலுமே பான் கார்டை சரண்டர் செய்ய விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் சரண்டர்: PAN மாற்றம் கோரிக்கை விண்ணப்ப படிவத்தை முதலில் நிரப்ப வேண்டும். அதன்மேல், நீங்கள் பயன்படுத்தும் PAN எண்ணை பதிவிட வேண்டும்.. ITEM NO: 11ல், இரண்டாவது பான் எண்ணின் விவரங்களை தரவேண்டும். அதன் நகலையும் இணைத்து, NSDL சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஃப்லைன் சரண்டர்: இதற்கு படிவம் 49A ஐ நிரப்ப வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய பான் கார்டின் விவரங்களை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.. இந்த படிவத்தை உங்கள் அருகிலுள்ள UTI அல்லது NSDL எனப்படும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் வசதி மையத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும்..
பிறகு அதற்கான ஒப்புகை ரசீதை வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் அதிகார வரம்பில் உள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்.. அதில், வருமான வரித் துறையின் வெப்சைட்டில், உங்கள் பகுதியின் அதிகார வரம்பு அதிகாரி யார்? என்பதை அறியலாம்..
இந்த கடிதத்தில், உங்கள் பான் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிப்பதுடன், சரணடைய வேண்டிய நகல் பான் கார்டின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். டூப்ளிகேட் கார்டின் நகல் மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் எனப்படும் NSDL -லிருந்து பெறப்பட்ட ஒப்புகை ரசீதையும் சான்றளித்து அதில் சமர்ப்பிக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications