5 ஏக்கர் நிலம் வைத்திருப்போருக்கு சர்ப்ரைஸ்.. விவசாயிகளுக்கு புது பம்ப் செட் வேணுமா? தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் என்னென்ன? தெரியுமா? வேளாண் துறையில் பல்வேறு நவீன திட்டங்களை அமல்படுத்தியிருக்கும் தமிழக அரசு, விவசாயிகளின் நலனையும் கவனத்தில் கொண்டுள்ளது. அந்தவகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மானியம் பற்றி காண்போம்.
இந்தியாவை பொறுத்தவரை, விவசாயத்தொழில்தான் பிரதானம்.. விவசாயம்தான் முதுகெலும்பாக உள்ளது.. அதனால்தான், மத்திய அரசும் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது.

தமிழ்நாடு: நம்முடைய தமிழகத்திலும், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதும், அதில் ஏராளமான நலத்திட்டங்களையும் அறிவித்தும், அதனை முறையாக செயல்படுத்தியும் வருகிறது... குறிப்பாக, கடந்த 2 வருடங்களாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது, விவசாயிகளுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.
பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு, 25 லட்சத்துக்கும் அதிகமான வேளாண் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின்சார வாரியத்துக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு, மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு மானியம், பாசன நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப் பாசன அமைப்புக்கு மானியம் போன்று பல்வேறு வகைகளில் இந்த அரசு உதவி செய்து வருவதை மறுக்க முடியாது.
இ வாடகை செயலி: இ-வாடகை செயலிமேலும். இ-வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தை திட்டத்தை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல், விளைபொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை தமிழக அரசு விடாமல் முன்னெடுத்து வருகிறது.
இதில் தமிழக விவசாயிகளால் பெரிதும் ஈர்க்கப்படுவது, பம்பு செட்டுகள் குறித்த அறிவிப்பும், சலுகைகளும்தான். ஏனென்றால், குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாவதுடன, பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகிறது. இதன்காரணமாக, மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைந்துவிடுகிறது.
பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில், பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவலாம்.. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றன.
இதற்கு விவசாயிகள் தங்களின் விபரங்களை முழுமையாக தெரிவித்து, புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கலாம்... இதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்... 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் யாராக இருந்தாலும் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
தங்களது திறன்குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்... இந்த திட்டத்தில் 5,000 சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக, தமிழக அரசு கடந்த வருடமே ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது..
ஆவணங்கள்: இதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், போட்டோ, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்றவற்றை ஆவணங்களாக இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. ஏனென்றால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக 1000 எண்கள் பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னுரிமை: இதை பயன்படுத்தி விவசாயிகள், 4 ஸ்டார் தரத்திற்கு குறையாமல் உள்ள மின்மோட்டாரை தேர்வு செய்யலாம்.. சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், 50% மானியத்தில் சூப்பரான மின்சார பம்புசெட்டை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்... அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் மோட்டார்களையும் தேர்வு செய்யலாம்.
இந்த திட்டத்தின் பயனை பெற வேண்டுமானால் https://mis.aed.tn.gov.in என்ற வெப்சைட்டில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பாசன வசதிக்கான உதவிகளை பெறலாம்.
விவசாயிகள்: அதேபோல, உழவன் செயலி மூலமாகவோ, அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் - வேளாண்மை பொறியியல் துறை அவர்களையும் விவசாயிகள் நேரடியாகவே அணுகி விளக்கம் பெறலாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications