கரண்ட் பில் வந்துருச்சா.. இபி மீட்டர் ரிப்பேர்? .. மின் மீட்டரை இடமாற்ற ஆன்லைனிலேயே வசதி.. ரொம்ப ஈஸி
சென்னை: புதிதாக மின் இணைப்பு பெறுபவர்களுக்காகவே, இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின் மீட்டரை மாற்ற விரும்புவோருக்கும், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பினை, மாநில அரசு தன்னுடைய வசமே வைத்திருக்கிறது.. இதற்காகவே, தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.. இந்த அமைப்பின் கீழ் 2 விதமான துணை அமைப்புகள் இயங்கி வருகின்றன.

மாற்றங்கள்: கரண்ட் கனெக்ஷன் புதிதாக வேண்டுமானால், அதற்கான வசதிகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்து வருகின்றன.. வழக்கமாக, புதிய இணைப்பை பெற வேண்டுமானால், கஸ்டமர்களுக்கு கால அளவு 30 நாட்களாக இருந்தது.. பிறகு, விஷயத்தில் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முடிவு செய்து, சில மாற்றங்களம், திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன.
அதன்படி, புதிதாக மின் இணைப்பு வேண்டும் என்று கேட்டால் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள்ளாகவே, வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.. அத்துடன், 3 நாட்களில் புதிய மின் இணைப்பை அளிக்க வகை செய்யப்படும், மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமெனில் 60 நாட்கள் வரை ஆகலாம் என்று அறிவிப்பு வெளியானது..
புதிய மின் இணைப்பு: அதுமட்டுமல்ல, புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 7 நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரப்போவதாகவும் கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
அதுமட்டுமல்ல, புதியமின் இணைப்பு பெற வேண்டுமானால் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை தற்போது உள்ளது.. புதிய மின்இணைப்பு அல்லது மின் இணைப்பு பெயர் மாற்றம் அல்லது மின் மீட்டரை இடமாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு, 'www.tangedco.gov.in' என்ற மின்வாரிய இணையளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.. இந்த விண்ணப்பங்களை, பிரிவு அலுவலகத்தினர் பரிசீலித்து இணைப்பு வழங்குவார்கள்.
இந்நிலையில், சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. மீட்டர் உள்ளிட்ட சாதனங்களை இடமாற்றம் செய்யும் சேவைக்கும், இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதி நேற்று முதல், அமலாகி உள்ளது.. யாருக்கெல்லாம் மின் மீட்டரை இடமாற்ற வேண்டுமோ, அவர்கள் 'www.tangedco.gov.in' என்ற வெப்சைட்டிற்கு சென்று விண்ணபிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இணப்புகளை பெற ஆவணங்கள்: சொத்து வரி ரசீது, விற்பனை ஒப்பந்தம் போன்ற அந்த சொத்து விண்ணப்பதாரருடையது தான் என்பதற்கான சான்று ஆதாரத்தின் நகல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டின் உரிமையாளராக இல்லை என்றால், வீட்டின் உரிமையாளரிடமிருந்து படிவம் 5 போன்று பெறப்பட்ட கடிதம் அல்லது விண்ணப்பதாரர் அந்த வீட்டில்தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றான படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும்...
விண்ணப்பதாருக்கு 112KW அதிகமாக மின் அளவு தேவை என்றால், அவர்கள் அதற்குரிய படிவங்களை ஸ்கேன் செய்து அதன் பிடிஎஃப்-ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications