தவறியது கணக்கு.. வீழாத வட மாவட்டமும், வீழ்ந்த "அந்தஸ்தும்".. தமிழகத்தில் பாமகவுக்கு இப்படியொரு நிலை?
சென்னை: நடந்து முடிந்த தேர்தலில் பாமக அதிர்ச்சி தோல்வியை அடைந்துள்ள நிலையில், முக்கிய நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறது.
பொதுவாக ஒரு கட்சி, மாநில கட்சி அந்தஸ்தினை பெற வேண்டுமானால், பொதுத்தேர்தலில் மாநிலத்தில் மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 8 சதவீத்துக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்..

மாநில கட்சி: அதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 சதவீதம் வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை பெற தகுதி அடைந்திருக்கிறது..
ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் என 4 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அதிமுக, பாஜவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்துள்ளதுடன், 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்குகளையும் பெற்றிருக்கிறது..
அதேபோல, திமுக கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் தனி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதன் மூலம் விசிகவுக்கும் மாநில கட்சி அங்கீகாரம் கிடைக்கப்போகிறது..
அந்தஸ்து: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.. அந்தவகையில், பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும்.. 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்... எம்பி தேர்தலில் பதிவான வாக்குகளில் 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கவேண்டும்.. அந்த தேர்தலில் 1 தொகுதியில் வென்றிருக்க வேண்டும்... மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
அந்தவகையில், விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் வென்று நிபந்தனையை பூர்த்தி செய்ததால், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகிறது விசிக..
சபாஷ் விசிக: எனவே, நாம் தமிழர் கட்சியும், விசிகவும், வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க போகிறார்கள். எப்படியும் இன்னும் 1 மாத காலத்துக்குள்ளாகவே இந்த அங்கீகாரங்கள் அதிகாரப்பூர்வமாக அந்தந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என தெரிகிறது.
ஆனால், இதில் பெரிதும் அதிர்ச்சியை தந்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சிதான்.. இந்த முறை பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டது பாமக.. இதில், தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே நல்ல வாக்குகளை பெற்று முன்னேறினார்.. இறுதிவரை திமுக வேட்பாளருக்கு டஃப் தந்தபடியே இருந்தவர், கடைசி நேரங்களில் பின்னடைவை சந்தித்தார்.
மாநில கட்சி: எனவே, பாமகவால் எங்கியுமே வெற்ற பெற முடியவில்லை.. இந்நிலையில, மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்திருக்கிறது.. காரணம், வெறும் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பாமக பெற்றிருக்கிறது. எனவே, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ள நிலையில் அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
அதில் பாமக கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்தை ஏன் திரும்பப் பெறக் கூடாது? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறதாம்.. தமிழ்நாட்டில் ஏற்கனவே தேமுதிக மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ள நிலையில் தற்போது பாமக கட்சிக்கும் மாநில அந்தஸ்து பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாமக: அதேசமயம், இந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 18,79,689 வாக்குகளை (4.30 சதவீதம்) பெற்றிருக்கிறது.. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலை எடுத்துக் கொண்டால், 23 தொகுதிகளில் போட்டியிட்டு, மொத்தம் 17,58,774 வாக்குகளை (3.8 சதவீதம்) பெற்றிருந்தது.. அதிலும், வடதமிழகத்தில் எப்போதுமே 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை பாமக தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
அதன்படி, இந்த தேர்தலிலும் பாமக தனது வாக்கு சதவீதத்தை தக்க வைத்திருக்கிறது. இதுஒருபுறம் கட்சிக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இழந்த அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டிய நெருக்கடியும் பாமகவுக்கு ஏற்பட்டிருக்கிறது..!!!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications