கடற்கரையில் நள்ளிரவில் திணறிய மீன்கள்.. சென்னை காசிமேட்டில் ஒரே பரபரப்பு.. நாளைக்கு புரட்டாசி வேற
சென்னை: காசிமேட்டில் மீன் வாங்க சென்ற மீன்பிரியர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது.. நாளை புரட்டாசி துவங்க உள்ள நிலையில், விருப்பமான மீன்களை அள்ளி சென்றுள்ளனர். இதனால், பொதுமக்களுடன், வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சென்னை காசிமேட்டை பொறுத்தவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, வாரஇறுதி விடுமுறையை கணக்கு செய்து, முன்கூட்டியே மீன்பிடிக்க செல்வது வழக்கமாகும்.
புரட்டாசி விரதம்: ஞாயிறு மட்டுமல்லாமல், விடுமுறை நாட்களில் காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல கூட்டம் அலைமோதிவிடும். ஆனால், நாளை புரட்டாசி விரதம் தமிழகத்தில் ஆரம்பமானது.. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே சாப்பிடுவார்கள். நாளையே புரட்டாசி மாதம் துவங்க உள்ளதால், வரப்போகும் ஒரு மாதத்துக்கு மீன்கள் உட்பட இறைச்சியை சாப்பிட மாட்டார்கள். எனவே, நேற்றைய தினமே மட்டன், சிக்கன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அந்தவகையில், காசிமேட்டிலும் விடிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் மக்கள் மீன் வாங்க குவிந்துவிட்டனர். புரட்டாசியை முன்னிட்டு பலரும் இன்று மீன் வாங்க வருவார்கள் என்பதால், மீனவர்கள் முன்கூட்டியே கடலுக்கு சென்று விசைப்படகுகளிலும், சைபர் படகுகளிலும், மீன்களை குவியல் குவியலாக கரைக்கு அள்ளி கொண்டு வந்து போட்டார்கள்.
பாறை, ஷீலா: அதேபோல, விசைப்படகுகள் மூலம் நீண்ட தூரம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்களும், ஞாயிறு அதிகாலையே கரைக்கு திரும்பிவிட்டார்கள்.
எனவே, அனைத்து வகையான மீன்களும் தங்கு தடையின்றி காசிமேட்டில் காணப்பட்டன. குறிப்பாக, வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, திருக்கை, பாறை, ஷீலா, சங்கரா, உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் வரத்தும் நிறையவே தென்பட்டது. அதிகாலை 2 மணி முதலே மீன் பிரியர்கள் திரண்டு வந்துவிட்டதால், எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் தலையே தென்பட்டது.

பெரிய வகை மீன்கள், சிறிய வகை மீன்கள் என அனைத்தையுமே, மீன்பிரியர்களும், மொத்த வியாபாரிகளும், சில்லறை விற்பனையாளர்களும் வாங்கி சென்றனர். இதனால், மொத்த வியாபாரிகள் முதல் சில்லறை விற்பனையாளர்கள் வரை பெருத்த மகிழ்ச்சி அடைந்தனர். காசிமேட்டில் மீன்களின் விலை விவரம் இதுதான்:
மீன்கள் விலை: வஞ்சிரம் - ரூ.1000, கொடுவா - ரூ. 900, பால் சுறா - ரூ. 500, ஷீலா - 500, சங்கரா - ரூ. 600, பாறை - ரூ. 600, இறால் - ரூ. 400, நண்டு - ரூ. 300, நகரை -ரூ. 300, பண்ணா - ரூ.300 கானாங்கத்தை - ரூ.300, கடும்பா - ரூ.200, நெத்திலி - ரூ.100 என்று விற்பனை செய்யப்பட்டன.
மீன் மார்க்கெட் மட்டுமல்லாமல், தமிழகத்தின் இறைச்சி கடைகளிலும் ஒரு கிலோ ஆட்டுக்கறி, 800 ரூபாய், பண்ணை கோழிக்கறி, 200, ரகத்தை பொறுத்து மீன், 150 முதல், 250 வரை விற்பனையானது. புரட்டாசி நாளை தொடங்க உள்ளதால், அதற்கு முந்தைய ஞாயிறான நேற்று, வழக்கத்தை விட அதிகளவில் விற்பனை நடந்ததாக, இறைச்சி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications