2004ல் எக்சிட் போல் வாஜ்பாய்க்கு ஆதரவாக வந்து.. கடைசியில் பாஜக தோற்ற கதை தெரியுமா? அதிரும் தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தல் 2004 தேர்தல் போல மாறிவிடக்கூடாது என்று பாஜக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.அப்போதும் பாஜகவிற்கு ஆதரவாக எக்சிட் போல் முடிவுகள் வந்து கடைசியில் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிராக வந்தது. அப்படி ஆகிவிட கூடாது என்று பாஜக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் திருப்பங்களுக்கு எடுத்துக்காட்டு என்றால் அது 2004 லோக்சபா தேர்தல்தான். 2004 லோக்சபா தேர்தலில் வாஜ்பாய் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட என்டிஏ கூட்டணி இந்தியா ஒளிரும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது. டிவி தொடங்கி தெரு பிரச்சாரம் வரை இந்தியா ஒளிரும் என்ற "ஹஸ்கி" குரலில் ஒரு பிரச்சாரம் ஓடிக்கொண்டே இருந்தது.

Lok Sabha election 2024 BJP Congress 2024

இந்தியா ஒளிரும் பிரச்சாரம் பாஜகவின் டிரேட் மார்க் பிரச்சாரமாக இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் இதுதான் இருந்தது. அப்போது தேர்தலை கணித்த பல கணிப்பாளர்கள் மீண்டும் வாஜ்பாய் வருவார் என்றே கூறி இருந்தனர். பாஜக வெற்றி கன்பார்ம் பாஸ் என்று பேச்சுக்கள் வந்தன.

பல தேர்தல் கணிப்பாளர்கள் வாஜ்பாய் அலை இருக்கிறது என்றுதான் கணிப்புகளை கூறி இருந்தனர். பலரும் பாஜக அலை இருப்பதாகவே தேசிய அளவில் கணிப்புகளை வெளியிட்டனர்.

எக்சிட் போல்: அப்போது வந்த எக்சிட் போல் கணிப்புகளில்,

என்டிடிவி-ஏசி நீல்சன்:கணிப்பில்: பாஜக 230-250, காங்கிரஸ் 190-205, மற்ற கட்சிகள் 100-120 என்று தெரிவிக்கப்பட்டது.
ஸ்டார் நியூஸ்-சி வாக்காளர் கணிப்பில்: பாஜக 263-275, காங்கிரஸ் 174-184 , மற்ற கட்சிகள் 86-98 என்று தெரிவிக்கப்பட்டது.
ஆஜ் தக்-மார்க் கணிப்பில்: பாஜக 248 , காங்கிரஸ் 190 , மற்ற கட்சிகள் 105 என்று தெரிவிக்கப்பட்டது.
சஹாரா டிஆர்எஸ் கணிப்பில்: பாஜக 278, காங்கிரஸ் 181 , மற்ற கட்சிகள் 102 என்று தெரிவிக்கப்பட்டது.
ஜீ நியூஸ்-தலீம் கணிப்பில்: பாஜக 249, காங்கிரஸ் 176 , மற்ற கட்சிகள் 117 என்று தெரிவிக்கப்பட்டது.
உண்மையான முடிவு கணிப்பில்: பாஜக 181, காங்கிரஸ் 218 , மற்ற கட்சிகள் 143 என்று தெரிவிக்கப்பட்டது.

அதாவது பாஜக பெரும்பான்மை பெரும் அல்லது பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும் , பெரும்பாலும் 230க்கு மேல் வரும் என்று கணிப்புகள் தெரிவித்தன.

முடிவு என்ன?: ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் 145 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. பாஜக 138 இடங்களை வென்றது. சிபிஐ(எம்) 43 இடங்களை வென்றது. அதாவது கணிப்புகளை விட 100- 130 இடங்கள் குறைவாக எடுத்தது பாஜக.

இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. இப்போது "இந்தியா ஒளிரும்" பிரச்சாரம் போல மீண்டும் "மோடி கேரண்டி" பிரச்சாரம் தங்களுக்கு எதிராக திரும்புமா என்ற அச்சம் பாஜக டாப் தலைவர்களுக்கு ஏற்பட்டு உள்ளதாம். 2024 லோக்சபா தேர்தல் 2004 தேர்தல் போல மாறிவிடக்கூடாது என்று பாஜக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

பாஜக நம்பர் கேம்: 2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.

பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒலித்தது. அதன்பின் அது நிறுத்தப்பட்டது. அதோடு 370 என்ற கோஷத்தையும் பாஜக எழுப்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று எக்சிட் போல் முடிவுகள் சாதகமாக வந்தும் கூட பாஜக கேம்ப் அதை கொண்டாடாமல் அமைதி காத்து வருகிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+