விஏஓ முதல் சார் பதிவாளர் வரை.. உங்கள் சொத்துக்கு பட்டா அவசியமா? பத்திரங்களை பதிவதுடன் இதுவும் தேவை
சென்னை: வீடு, அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்கிவிடுவதாலேயே, அது உங்களது சொத்து என்று முழுமையாக சொல்லிவிட முடியுமா? பத்திரங்களை பதிவு செய்வதன் அவசியம் என்ன தெரியுமா?
சொத்துக்களை வாங்கி நீங்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் அனுபவித்தாலும், அதை முறையாக பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.. இப்படி பதிவு செய்து பட்டாக்களையும் முறையாக பெற்றுக் கொள்ள வேண்டும்.. பட்டாவை உங்களிடம் வைத்திருந்தால் மட்டுமே அது உங்களுடைய முழுமையான சொத்தாக கருதப்படும்.

பட்டாக்கள்: இந்த பட்டாக்கள் அனைத்தும் வருவாய்த் துறை சார்பில் நேரடியாகவே தரப்படுகிறது.. இந்த பட்டா வழங்கும் முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. பட்டா பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்.
இதற்கு முதலில், நீங்கள் சொத்துக்களை வாங்கும் பகுதியிலுள்ள விஏஓ என்று சொல்லப்படும் கிராம நிர்வாக அலுவலரிடம் மனு தந்து பெற வேண்டும்.
அந்த மனுவுடன், சொத்து மற்றும் உங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அடையாள ஆவணங்களின் நகல்களையும் வழங்க வேண்டும்.... இந்த மனுவின் மீது விஏஓ அறிக்கை ஒன்றை தருவார்..
விஏஓ: அந்த அறிக்கையுடன், தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட மண்டலத் துணை தாசில்தாரிடம் ஒப்படைப்பார்.. ஆவணங்களைத் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, மனுதாரருக்குப் பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார்கள். இந்த பணிகள் அனைத்தும் முடிந்த 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.
இந்த பட்டாக்கள்தான், உங்களின் சொத்து அடையாள ஆவணமாகும்.. இது உங்களிடம் இருந்தால், உங்களுடைய சொத்துக்களை யாருமே உரிமை கொண்டாட முடியாது.. அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்க முடியும் என்பதால், அதே சொத்தை எல்லோருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது..
பிளாட்கள்: அதுவும் இல்லாமல், பிளாட்களை போட்டு மனைகளை ரியல் எஸ்டேட் தரப்பினர் விற்றுவிட நேர்ந்தால், சில மனைகள் வேறு யாருக்காவது தெரியாமல் ஒதுக்கப்பட்டுவிடலாம். எனவேதான், எனவே, ஒரு சொத்தை பதிவு செய்யும் நபர், பத்திரப் பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையில் பட்டா மாறுதல் பெற்றுக்கொண்டால், எந்த குழப்பமும், பிரச்சனையும் பிற்காலத்தில் வராது.
முன்பெல்லாம் பட்டா அவசியம் இல்லை என்று சொன்னார்கள்.. அதாவது இடத்தை பத்திரப் பதிவு செய்தாலே போதுமானது என்று சொல்லப்பட்டது.. ஆனால், சில வருடங்களுக்கு முன்புதான், முன் சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்யும் முன்பு, சம்பந்தப்பட்ட சொத்திற்கான முன் ஆவணம், பொது அதிகார ஆவணம், மூலப்பத்திரம், பட்டா, தல வரைபடம் (எப்.எம்.பி.ஸ்கெட்ச்), சிட்டா, அடங்கல், பட்டா ஆகியவற்றைக் கொடுத்தால் தான் பதிவுசெய்யப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
ஆவணங்கள்: இந்த தேவையான ஆவணங்களை சார்பதிவாளர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.. அந்த அளவுக்கு பட்டாக்கள் மிகவும் முக்கியமான ஆவணமாகும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications