பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள்
திம்பு: இமயமலை நாடான பூடானில் சற்று முன்பு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான ஒரு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூடான் மட்டுமன்றி இந்தியா, சீனா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இமயமலை தொடரில் அமைந்துள்ள குட்டி நாடு பூடான். மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த குட்டி நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 8 லட்சம் தான். இந்த சிறிய நாட்டில் எதிர்பாராத விதமாக இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் இது 5.6ஆக பதிவாகியுள்ளது.

திடீரென பூடானைத் தாக்கிய இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. வீடுகளுக்குள் இருந்த ஃபேன், கதவு மற்றும் ஜன்னல்கள் பயங்கர சத்தத்துடன் அதிரத் தொடங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்களது குழந்தைகளுடன் ரோட்டிற்கு ஓடி வந்தனர்.
பூடானில் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், சீனா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications