அடேங்கப்பா.. இத்தனை பொறுப்புகளா.. அமைச்சர் டிஆர்பி ராஜா வகிக்கும் பொறுப்புகள் என்னென்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்துறை அமைச்சராகி உள்ள டிஆர்பி ராஜா தற்போது திமுகவின் ஐடி விங் செயலாளராக இருக்கிறார். இதேபோல் துணை சபாநாயகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். டிஆர்பி ராஜா குறித்து சில தகவல்களை இப்போது பார்ப்போம்.

மன்னார்குடி தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 2016, 2021 ஆகிய மூன்று முறை திமுக சார்பில் தொடர்ந்து ஹேட்ரிக் வெற்றி பெற்றவர் டிஆர்பி ராஜா. திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனான டிஆர்பி ராஜா, மன்னார்குடியை திமுகவின் கோட்டையாக மாற்றி உள்ளார்.

மூன்றாவது முறை மன்னார்குடியில் வெற்றி பெற்ற போதே அமைச்சராக்க வேண்டும் என்று டிஆர் பாலு கோரிக்கை வைத்தாராம். ஆனால் அதை பரிசீலித்த முதல்வர் முக ஸ்டாலின், அதற்கு பதிலாக திமுக ஐடி விங் செயலாளராக நியமித்தார். ஐடி விங்கில் சிறப்பாக செயல்பட்டதால் தற்போது அமைச்சராகி உள்ளார் டிஆர்பி ராஜா.

Do you know the responsibilities of Minister TRB Rajaa? check here

டிஆர்பி ராஜா அமைச்சரானதன் மூலம் டெல்டா பகுதியில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறை நீங்கி உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர். அதேநேரம் டெல்டா பகுதியில் திருவையாறு துரை சந்திரசேகரன் நான்கு முறை எம்எல்ஏவாக இருக்கிறார். கும்பகோணம் அன்பழகன் மூன்று முறையும், திருவாரூர் பூண்டி கலைவாணன் இரண்டு முறையும் எம்எல்ஏவாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் டிஆர்பி ராஜாவை விட சீனியர்கள் ஆவர்.

இவர்களை எல்லாம் மீறி டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் டிஆர் பாலு என்கிறார்கள். எதிர்ப்புகள் எழுந்த போதே, டிஆர் பாலுவே நேரடியாக பேசி அவர்களை சமாதானம் செய்ததாகவும் அதன் பிறகே அமைச்சர் பொறுப்புக்கான அறிவிப்பு வெளியானது என்றும் ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

திமுகவில் அமைச்சர்களாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பிய ஸ்டாலின், அதன் அடிப்படையிலேயே டிஆர்பி ராஜாவிற்கு கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். மிகவும் சவாலான அதேநேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையான தொழில் துறை டிஆர்பி ராஜாவிற்கு ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் படிப்பும், திறமையும் காரணம் என்கிறார்கள். தொழில்துறையில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க வேண்டிய பொறுப்பும் டிஆர்பி ராஜாவிற்கு இருக்கிறது.

Do you know the responsibilities of Minister TRB Rajaa? check here

சரி டிஆர்பி ராஜா வகிக்கும் பொறுப்புகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.. திமுக ஐடி விங் செயலாளராக இருக்கிறார். அத்துடனர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் துணை சபாநாயகர்களில் ஒருவராகவும் டிஆர்பி ராஜா இருக்கிறார். இது தவிர தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், தமிழ்நாடு பொதுக்கணக்கு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார்.

முன்னதாக டிஆர்பி ராஜா வகித்த பதவிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்: கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரை திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணியின் மாநில செயலாளராக இருந்தார். அதேபோல் 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்தார். 2011-12 மற்றும் 2014-15 வரை தமிழ்நாடு மதிப்பீடுகள் குழு உறுப்பினராகவும், 2011-2013 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். அதேபோல் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டையில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் சேர்மன் ஆகவும் டிஆர்பி ராஜா இருந்துள்ளார். டிஆர்பி ராஜா வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 'வாக்காளர்கள் மனநிலை'குறித்து ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+