கால் வச்ச இடமெல்லாம் அசத்தல்! செம "டிராக் ரெக்கார்ட்".. தலைமை செயலாளர் முருகானந்தம் பற்றி தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் நியமிக்கப்பட்டு உள்ளார். பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்னென்ன பொறுப்புகளை வகித்தார்: பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
ஐஏஎஸ் தேர்வில் நேரடியாக வெற்றி பெற்று பணிக்கு வந்தவர்.
இவர் 1991-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச். நேரடியாக தமிழக கேடர்.
விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக கொரோனா காலத்தில் கூடுதல் பொறுப்பில் என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அப்போது பணிகளை சிறப்பாக செய்தார்.
எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது நிதித்துறை செயலாளராக இருந்தார். இவர்தான் ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தயார் செய்தார்.
பின்னணி: முருகானந்தம் சென்னைக்காரர்.. ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார். முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் இருந்தார்.. உதயசந்திரன் அதன்பின் நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தனர்.
முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.
பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆக உள்ளார். விரைவில் தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றும், ஸ்டாலின் வெளிநாடு பயணம், உதயநிதி ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்கள் கிசுகிசுக்கப்படுவதால்.. விரைவில் முருகானந்தன் சார்ஜ் எடுக்க வாய்ப்பு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் அந்த பொறுப்பிற்கு முருகானந்தம் வந்துள்ளார். சிவ்தாஸ் மீனா ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக பார்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு மாஸ்டார்மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்தவர். ஆனால் அவர் பணியில் பெரிதாக சோபிக்கவில்லை என்று புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டு உள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications