இவர் விட மாட்டார் போலயே.. எடப்பாடி 2.0 இதுதானா? சட்டென நடந்த 3 மெகா சம்பவங்கள்.. கவனிச்சீங்களா?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென அரசியல் ரீதியாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தல் 2024 முடியும் வரை பெரிதாக ஆக்டிவாக இல்லாத எடப்பாடி பழனிசாமி தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளார்.
எடப்பாடி 2.0 என்று சொல்லும் அளவிற்கு அடித்து ஆட தொடங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிலும் கடந்த 1 வாரத்தில் எடப்பாடி செய்த 3 சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இத்தனை காலம் உறக்கத்தில் இருந்த அதிமுக தொண்டர்களையும் எழுச்சி பெற வைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3 முக்கிய நடவடிக்கை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயம் குறித்து கேள்விப்பட்டதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து 3 முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
நடவடிக்கை 1 - வழக்கு: முதல் ஆளாக இந்த விவகாரத்தில் லீகல் டீமை அனுப்பி எடப்பாடி வழக்கு போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்தனர்.
அப்போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
விஷச் சாராய விற்பனை உள்ளாட்சி அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடக்காது என்பதால், அவர்களின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழக அரசுத்தரப்பில் வழக்கறிஞர் முனியப்பராஜ், விஷ சாராய விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளித்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
நடவடிக்கை 2: முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அங்கே சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு உள்ளார். அதோடு இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நேற்று போராட்டமும் மேற்கொண்டார்.
திமுக அரசை எதிர்த்து தீவிரமாக போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னெடுக்க தொடங்கி உள்ளார்.
நடவடிக்கை 3: இதில் அடுத்த நடவடிக்கையாக இன்று எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டி, இன்று ஆளுநரை எடப்பாடி சந்திக்க உள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென அரசியல் ரீதியாக வேகம் எடுக்க தொடங்கி உள்ளார். லோக்சபா தேர்தல் 2024 முடியும் வரை பெரிதாக ஆக்டிவாக இல்லாத எடப்பாடி பழனிசாமி தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications