சுடுகாட்டிற்கு அருகே நடந்த சம்பவம்.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.. எப்ஐஆரில் உள்ள திடுக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சியில் 40 பேரின் உயிரை குடித்த கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் போட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பான எப்ஐஆரில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 19.06.2024 ந்தேதி 11.30 மணிக்கு கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் R. ஆனந்தன் ஆகிய நான் ஆஜரில் இருந்தபோது கள்ளக்குறிச்சி கருணாபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் தினகரன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் மனுவின் பேரில் வழக்கு பதிவு செய்த விபரம் பின்வருமாறு.

kallakurichi mk stalin illicit liquor

தினகரன் வத/பெ சேகர் கிழக்கு தெருகருணாபுரம் கள்ளக்குறிச்சி பெறுதல் உதவி ஆய்வாளர் கள்ளக்குறிச்சி காவல் நிலையம். அய்யா நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் 1 தெருவில் எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். நான் கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமார் மகளை திருமணம் செய்து 2 வயதில் வர்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

எனது அப்பா சேகர் என்பவர் விவசாய கூலி வேலையும் மற்றும் மாட்டு தரகராகவும் வேலை செய்து வந்தார். என் அப்பாவிற்கு குடிபழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார். எங்க ஊரை சேர்ந்த கண்ணுகுட்டி கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோர் கடந்த சில நாட்களாக எங்க ஊர் சுடுகாட்டுக்கு அருகில் சாராயம் விற்று வந்தனர்.

அதன்படி 18.06.2024 ந் தேதி சுமார் 07.00 மணியளவில் எங்கள் ஏரியாவில் சாராய விற்றுவந்த கண்ணுகுட்டி @ கோவிந்தராஜூம், தாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து படுத்து விட்டார். வழக்கம்போல் 19.06.2024 ந் தேதி காலை சுமார் 08.30மணிக்கு தூங்கி எழுந்த அவர் தனக்கு வயிறு வலிப்பதாகவும் வாந்திவருவதாகவும் சொன்னதால் நானும் எனது அம்மா கஸ்தூரியும் அப்பாவை காலை சுமார் 09.00 மணியளவில் கள்ளக்குறிச்சி துருகம் ரோட்டில் சஞ்சீவி த மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தவர்.

சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். பின்னர் இறந்த அப்பா சேகரின் பிரேதத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து சென்று வைத்துவிட்டேன். பின்னர் எங்கள் கிராமத்தில் விசாரித்தபோது கண்ணுகுட்டி கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதிரன் மற்றும் கோவி/ மனைவி விஜயா ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்த எங்க ஊரை சேர்ந்த சுரேஷ் 45த/பெ தர்மன் மிஷன் பள்ளி அருகில் கருணாபுரம்.

பிரவின்குமார் 29 த/பெ கணேசன் மேட்டு தெரு கருணாபுரம் ஆகியோருக்கும் என் அப்பாவை போன்று வயிற்றுவலி மற்றும் வாந்தி மயக்கம் வந்து மருத்துவமனைக்கு சென்றவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் தெரிந்தது.

மேலும் மேற்கண்ட கண்ணுகுட்டி @ கோவிந்தராஜி மற்றும் தாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்த எங்க பகுதியை சேர்ந்த பாலன் மகன் மகேஷ், ராமன் மகன் கண்ணன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனை மருத்துவகல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிய உடனே சுமார் 11.30 மணிக்கு காவல் நிலையத்தில் மேற்படி சம்பவம் தொடர்பாக புகார் அளித்தேன்.

காவல் துறையினர் எங்க வீட்டுக்கும் பிரவின் மற்றும் சுரேஷ் வீட்டிற்கும் சென்று இறந்து போனவர்களின் பிரேதங்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்தனர். எனது அப்பா மற்றும் எங்கள் ஊரை சேர்ந்த நபர்கள் இறப்பிற்கும் மற்றும் உடல் நல பாதிப்படைய காரணமான கண்ணுகுட்டி @ கோவிந்தராஜி மற்றும் அவரது தம்பி தாமோதிரன் மற்றும் கோவிந்தராஜ் மனைவி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+