இது மட்டும் செஞ்சா போதும்.. பணம் கொட்டும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில்.. வந்த சிறப்பான செய்தி!
சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்குகளை (சுகன்யா சம்ரித்தி யோஜனா - SSY) இனி பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் தங்கள் PNB ONE மொபைல் வங்கிச் செயலி மூலம் எளிதாகத் தொடங்கலாம். இதன் மூலம், கணக்கு திறக்க வங்கி கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள PNB வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆன்லைன் வசதி கிடைக்கும். PNB ONE செயலியின் 'சேவைகள்' பிரிவில், 'அரசாங்க சேவைகள்' என்பதற்குள் 'சுகன்யா சம்ரித்தி கணக்கு திறப்பு' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி கணக்கை முழுமையாகத் தொடங்கலாம்.

செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கு
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பெற்றோர்கள் சேமிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சிறு சேமிப்புத் திட்டமாகும். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில், பெற்றோரோ அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரோ இந்த கணக்கைத் திறக்கலாம்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: குறைந்தபட்ச ஆண்டு முதலீடு ₹250, அதிகபட்ச ஆண்டு முதலீடு ₹1.5 லட்சம். கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் வரையோ அல்லது பெண் குழந்தைக்கு 18 வயதுக்குப் பிறகு திருமணம் ஆகும் வரையிலோ கணக்கு தொடரும். மேலும், வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ், முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு உண்டு.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தால் காலாண்டுதோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஜனவரி 2015-ல் திட்டம் தொடங்கியபோது 9.1% வட்டி வழங்கப்பட்டது. ஏப்ரல் 2015-ல் இது 9.2% ஆக உயர்ந்தது. பின்னர் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வட்டி விகிதம் குறைந்து, ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2022 வரை 7.6% ஆக இருந்தது.
செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கு எப்படி தொடங்குவது?
தற்போது, அதாவது ஜனவரி 2024 முதல், இந்தத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது. இந்த வட்டி விகிதம், நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பிற சேமிப்புத் திட்டங்களை விட பொதுவாக அதிகமாகவே இருந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கான 8.2% வட்டி விகிதம் அடுத்த நான்கு மாதங்களுக்கு, அதாவது ஜூன் மாதம் தொடங்கும் நடப்பு காலாண்டு முழுவதும் மாற்றப்படாமல் தொடரும்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம், குறிப்பாகப் பெண்களின் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவச் செலவுகளைச் சந்திப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இத்திட்டம் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இது பெண்களுக்கு உறுதியான எதிர்காலத்தை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் சார்பாக, பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்தவுடன், கணக்கு குழந்தையின் பெயருக்கு மாற்றப்படும். மேலும், 15 ஆண்டுகள் வரை இதில் பணத்தைச் செலுத்த முடியும், 21 ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை முழுமையாகப் பெறலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications