இதுதான் அந்த 9 தொகுதி? இங்கேதான் "அந்த" கட்சி போட்டி போட போகுதா? பலே திமுக..படக்குனு பார்க்குது பாஜக
சென்னை: இந்த முறை டபுள் டிஜிட் சீட்டுக்களை பெற்றுவிடுவது என்று தமிழக காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. எனினும், திமுக கூட்டணியில், அக்கட்சிக்கு எத்தனை சீட்கள் கிடைக்க போகின்றன என்பதில், எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தயாராகி வருகிறது.. இந்த முறை திமுக கூட்டணியில் 20 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்று அக்கட்சி முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.

அதுமட்டுமல்ல, 20 சீட் கேட்டால்தான், 15 சீட்டாவது கிடைக்கும் என்பதால், சீட் எண்ணிக்கையை உயர்த்தி கேட்கும்படி, மேலிட காங்கிரஸே, தமிழக காங்கிரஸுக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது.
காங்கிரஸ் பிளான்: அதற்கேற்றபடி, மாநில தலைவர் அழகிரியும், செய்தியாளர்களை எப்போது சந்தித்தாலும், இந்த முறை அதிக சீட்களை திமுகவிடம் கேட்டு வாங்குவோம் என்று கனத்த நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார். ஆனால், திமுகவின் கணக்கு என்ன என்று இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில்தான், அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து, அக்கட்சியின் தலைவர் கார்கே ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார். இந்த கூட்டத்தில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டனர்.
வெற்றி வாய்ப்பு: அப்போது, தமிழகத்தில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்னென்ன? சீட் எண்ணிக்கைகள் எவ்வளவு? தொகுதிகள் எவ்வளவு என்பது முதல் பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையைவிட, இந்த முறை அதிக தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் கடந்த முறை தந்ததிலிருந்து 1 தொகுதியைக்கூட குறைந்துவிடக்கூடாது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில், கிட்டத்தட்ட 3 தொகுதிகளில், இப்போது திமுகவே நேரடியாக போட்டியிட போவதாக தெரிகிறது. அதாவது, கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற காங்கிரஸின் தொகுதிகளில், தற்போது திமுகவும் முனைப்பு காட்டியும் வருகிறது. அதுமட்டுமல்ல,
திமுக கூட்டணி: அப்படியானால், செல்வாக்குள்ள தொகுதிகளை திமுகவுக்கு விட்டுத்தர வேண்டிய நிலைமை காங்கிரசுக்கு ஏற்படக்கூடும்.. ஒருவேளை தங்களது செல்வாக்கான தொகுதிகரளை திமுகவிடம் விட்டுத்தர வேண்டி வந்தால், அவைகளுக்கு பதிலாக வேறு என்னென்ன தொகுதிகளை கேட்பது? சாதகமான தொகுதிகள் என்னென்ன? என்பதெல்லாம் லிஸ்ட் போட்டு தரும்படி, மேலிட காங்கிரஸ், தமிழக காங்கிரஸை கேட்டுக் கொண்டதாம்.
அதன்படியே ஒரு லிஸ்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு போன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
தொகுதிகள்: இந்த தொகுதிகளில், ஏற்கனவே காங்கிரஸ் வெற்றிவாகை சூடியிருக்கிறது.. அதனால்தான், தொகுதியை மாற்றி போட்டியிட சொன்னாலும், அதற்கேற்றவாறு தொகுதிகளை இப்போதே தேர்வு செய்து வைத்திருக்கிறதாம். எப்படியும் இவைகளை அடிப்படையாக வைத்து, பேச்சுவார்த்தை விரைவில் துவங்கலாம் என்கிறார்கள்.
இதனிடையே, இன்னொரு தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.. திருச்சி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வென்றிருந்தது. ஆனால், இந்த முறை திருச்சியை, காங்கிரசுக்கு ஒதுக்க முடியாது என்றே, மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாக தெரிகிறது. அப்படியானால், ராமநாதபுரத்தை கொடுக்குமாறு, ப.சிதம்பரம் கேட்டிருக்கிறாராம்.. முஸ்லிம் லீக்கிடம் பேசுவதாக கூறிச் சென்றிருக்கிறாராம் டி.ஆர். பாலு.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications