வாய்விட்டு சொன்ன வைகோ..சட்டென மதிமுக கியர் ஏறுதே.. "கலையுதா குருவிக்கூடு"..சைலண்டா கவனிக்கும் திமுக
சென்னை: திமுகவுடன் இணக்கமான போக்கை மதிமுக கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன.. அதேசமயம், நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்புகளும் பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானது என்றே பலரும் கருதிவருகிறார்கள்.. எப்படியும் பாஜக, அதிமுகவை சமாதானப்படுத்திவிடும் என்றும் சலசலப்புகள் உள்ளன.
சமாதானம்: அதற்கேற்றவாறே, பாஜக மேலிட தலைவர், அதிமுக சீனியர் ஒருவருக்கு போனை போட்டு பேசியிருக்கிறார்.. ஆனால், வெள்ளைக்கொடி எடப்பாடி பழனிசாமியிடம் வேலைக்கு ஆகவில்லை. முறிந்தது முறிந்ததுதான் என்று கூட்டணி விஷயத்தில் கறாராக இருக்கிறாராம். அதேசமயம், அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியிலும் அதிமுக கூடாரம் இறங்கி உள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணி தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மதிமுகவும் எம்பி தேர்தலுக்கு ஜரூராக தயாராகி கொண்டிருக்கிறது.. மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த முறை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வைகோவின் கர்ஜனை, திமுக கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததை மறுக்க முடியாது..
கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழகம் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்து அதன் வெற்றியையும் அறுவடை செய்திருந்தது..
வைகோ பேச்சு: இந்த முறை எம்பி தேர்தலில் துரை வைகோ களமிறங்க போவதாக, கடந்த ஒரு வருட காலமாகவே பேச்சு அடிபடுகிறது.. அதற்கேற்றவாறு, துரை வையாபுரியின் அரசியலும் வேகமெடுத்தது..
மதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். உதயநிதி அமைச்சரானதற்கு நேரிலேயே சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார். அந்தவகையில், திமுகவுடன் மதிமுகவின் இணக்கமான கூட்டணி நட்பு தொடர்ந்து வருகிறது.. மற்றொருபுறம் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை எடுத்து, தமிழக கட்சிகளை அலர்ட் செய்து வருவதும் தீவிரமாகி வருகிறது.
மதிமுக வைகோ: வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக மதவாத சக்தி பாஜகவை முழு பலத்துடன் எதிர்க்க அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிச்சயம் மேற்கொள்வார்" என்று துரைவைகோவும் கூறியிருந்தார். அந்தவகையில், கோவில்பட்டியில் துரைவைகோ போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரபரத்தன.
அதாவது, காங்கிரசின் சிட்டிங் தொகுதியான விருதுநகரை துரை வைகோவுக்கு திமுக ஒதுக்கீடு செய்து தருவதாக வைகோவிடம் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிக் கொடுத்திருப்பதாக தமிழக அரசியலில் சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், எல்லா யூகங்களுமே திடீரென தவிடுபொடியாகின..
"இந்த முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன், அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்யப்போகிறேன்" என்று அறிவித்துவிட்டார் துரை வைகோ.. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என மதிமுகவில் பெரும் விவாதமே நடந்தது.
தனித்தன்மைகள்: இது குறித்து நாம் சிலரிடம் விசாரித்தபோது, "துரைவைகோவுக்கு திமுக சீட் ஒதுக்கினாலும் அவர் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக தலைமை கறாராக சொல்லிவிட்டது. இது குறித்து கட்சியில் விவாதம் வந்தபோது, திமுக சின்னத்தில் துரைவைகோ போட்டியிடுவது கட்சியின் தனித்தன்மையை பாதிக்கும். கட்சி நிர்வாகிகள் திமுக சின்னத்தில் போட்டியிட்டால் அது இஷ்யூவாகாது.
அதுவே தலைவர் வைகோவின் மகன் போட்டியிட்டால் கட்சி பலகீனமாக தெரியும். அதனால், திமுக சின்னம் எனில் துரை போட்டியிடுவது சரியாக இருக்காது என வைகோவிடமும் துரையிடமும் நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல, திமுக கடந்த முறை போல 1 சீட் தான் ஒதுக்கும். அதில் துரை போட்டியிட்டால், கிடைத்தது ஒரு சீட்டு, அதை கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் மகனுக்கு கொடுத்து விட்டார் வைகோ என்று விமர்சிப்பார்கள்.
பெரிய பிளான்: இது நம் தொண்டர்களிடம் பேசுபொருளாகும். அதனால், துரை போட்டியிடுவதை தவிர்க்கலாம். அடுத்த 2 வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதில் அவர் போட்டியிடட்டும் என்றும் மாநில நிர்வாகிகள் சொல்லியுள்ளனர். இது சரியானது தான் என வைகோவும் ஏற்றுக்கொண்டுவிட்டாராம். அதனால்தான், நான் போட்டியிடமாட்டேன் என துரை வைகோ சொல்லி வருகிறார்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் மதிமுகவினர்.
ஆனால், இதெல்லாம் ஒரு வாரத்துக்கு முந்தைய நிலைமை.. இப்போது மதிமுக கூடாரமே வேற லெவலுக்கு பிசியாகிவிட்டது.. திடீர்னு 12 மாவட்டங்களில் வேகம் எடுத்துவிட்டது மதிமுக..
இந்த 12 மாவட்டங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், இந்த மாவட்டங்களில் சட்டசபை தொகுதிகள் வாரியாக, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கும் பணியை, அக்டோபர் 30க்குள் முடிக்கும்படியும், மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிலும் ஈரோடு, விருதுநகர், திருச்சி, கடலுார், காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகள் லிஸ்ட்டையும் வைகோ வெளியிட்டுள்ளார்.
என்ன காரணம்: இதற்கெல்லாம் என்ன காரணம் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், துரை வைகோ இந்த முறை போட்டியிட்டே ஆக வேண்டும் என்று விருதுநகர், திருச்சி, தேனி மாவட்ட மதிமுகவில் தீர்மானமே நிறைவேற்றிவிட்டார்களாம். ஈரோடு தொகுதியில் மறுபடியும் தனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று மூத்த தலைவர் கணேசமூர்த்தியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது..
அதேபோல, காஞ்சிபுரத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் களமிறங்க ஆசைப்படுகிறார் போலும். இப்படி விருதுநகர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூரில் முக்கிய சீனியர்கள், போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.. மதிமுகவின் விருப்பம் இப்படியிருந்தாலும், திமுக என்ன செய்ய போகிறதென்று தெரியவில்லை. ஏற்கனவே 1 சீட் மட்டுமே ஒதுக்கப்போவதாக சொன்னர்கள்.. அல்லது 2 சீட்வரை செல்லலாம் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி: நேற்று முன்தினம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக கூட்டணியில்தான் மதிமுக தொடரும் என்று என்று உறுதிபட தெரிவித்திருந்தாலும், மதிமுக எதிர்பார்க்கும் சீட்டுகள் திமுகவில் தரப்படுமா? என்பது சந்தேகம்தானாம். அல்லது வேறு யாருடனாவது மதிமுக, கூட்டணி வைத்து அதிக சீட்டுக்களை பெற போகிறதா? என்பதும் தெரியவில்லை.
4 நாட்களுக்கு முன்பு துரை வைகோ ஒரு பேட்டி தந்திருந்தார்.. பாஜக கூட்டணியை அதிமுக முறித்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு அவர், "என்னை பொறுத்தவரை திராவிட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தமிழ்நாட்டிலிருந்து மதவாத சக்தியான பாஜகவை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும். பாஜகவை விட்டு விலகுவது என்ற முடிவை அதிமுக எடுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் வரவேற்கும்" என்று தெரிவித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications