சென்னையில் டேட்டிங் ஆப்.. தனிமையில் இருக்க ஆசைப்பட்ட சினிமா ஊழியர்.. சொல்ல முடியாத அளவுக்கு சம்பவம்
சென்னை: சென்னை வடபழனியில் டேட்டிங் ஆப் மூலம் தனிமையில் இருக்க ஆசைப்பட்ட சினிமா ஊழியருக்கு 2 நாட்களாக என்ன நடந்தது தெரியுமா? 56 வயதில் அவருக்கு ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து பார்ப்போம்.
ஓரிணச்சேர்க்கைக்கு விரும்புவோருக்கு சில ஆப்கள் சென்னை,கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் மறைமுகமாக செயல்படுகின்றன. அந்த ஆப்களில் சபலத்தில் போகும் ஆண்கள் கடைசியில் வருத்தப்படும் அளவிறகு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. தனிமையில் சந்திக்க ஆசைப்படும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை குறி வைத்து பணம் பறித்து மோசடிகள் அரங்கேறுகின்றன.

அப்படித்தான் சென்னை வடபழனி மாதா தெருவில் ஆப் மூலம் பழகி இளைஞரை தனிமையில் சந்திக்கப்பட்ட இளைஞரிடம் சிறுவன் ஒருவர் பீர் பாட்டிலை வைத்து பணம், செல்போன், பைக் என அனைத்தையும் பறித்துவிட்டு அனுப்பி உள்ளார். ஆசையோடு போன இளைஞருக்கு ஆயுசுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்திருக்கிறது.
சென்னை கே.கே. நகர், ராஜமன்னார் சாலையை சேர்ந்த 56 வயதாகும் ராஜாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். டேட்டிங் ஆப் மூலமாக ராஜாவுக்கு ஆண் நபர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டதாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நபர் ராஜாவை பார்க்க வேண்டும் என வடபழனி கோவில் பின்புறம் அழைத்து உள்ளார்.
அதை நம்பி ராஜா அங்கு சென்றார். பின்னர் தனது வீடு அருகில் தான் உள்ளது என வடபழனி, மாதா தெருவிற்கு அந்த நபர், ராஜாவை அழைத்து சென்றார். அங்கு சென்றதும் வீட்டில் இருந்த 2 பெண்கள் உள்பட 7 பேர் சுரேசை மிரட்டி கட்டி வைத்து 2 நாட்களாக தாக்கி உள்ளார்களாம். அவரிடம் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.27 ஆயிரம், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் என அனைத்தையும் அந்த கும்பல் பறித்து விட்டார்களாம்.
மேலும் ராஜாவை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இதுகுறித்து வெளியே கூறினால் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு விடுவோம் என அந்த கும்பல் மிரட்டி அவரை அனுப்பி உள்ளதாம். இதனால் ராஜா பயந்து புகார் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வடபழனி போலீசார் இதைபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை கைது செய்திருக்கிறார்கள்.
இதை அறிந்த ராஜா நேற்று வடபழனி காவல் நிலையத்தில் தைரியமாக சென்று புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜாவிடம் பணம் பறித்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன், வடபழனியை சேர்ந்த இம்ரான், பரத்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாதவன் மீது ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறதாம். தனது நண்பர்களுடன் சேர்ந்து மாதவன் இது போன்ற மோசடி செய்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications