நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது.. இந்த வெயிட்டிங் லிஸ்ட் மட்டும் விழுந்தா பிரச்சனைதான்.. இதை படிங்க!
சென்னை: நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கு எந்த பெர்த் கிடைக்கிறதோ அந்த பெர்த்துக்கு ஏற்றபடி உங்களுக்கான விதிகள் மாறுபடும். இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது. அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன.

உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன.இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் .. ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.
உங்களின் வயதுக்கு ஏற்ப இருக்கைகள் உங்களுக்கு ரயில்வே மூலம் ஒதுக்கப்படும். இந்த பெர்த் அனைத்திற்கும் ஒரே விதிகள் கிடையாது. விதிகள் அனைத்திற்கும் தனி தனி. முக்கியமாக வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் கொடுக்கப்படும் விதிகள் தனி. அதை பற்றி பயணிகள் தெரிந்துகொள்வது மிக அவசியமானது.
வெயிட்டிங் லிஸ்ட்: வெயிட்டிங் லிஸ்டில் இரண்டு வகை உள்ளது. ஒன்று ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட். இன்னொன்று பிக்யூஎல் வெயிட்டிங் லிஸ்ட் அதாவது Pooled Quota Waitlist. இதில் ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
உதாரணமாக சென்னை - குமரி செல்லும் ஒரு ரயிலை எடுத்துக்கொள்வோம். இதில் நீங்கள் சென்னை மாவட்டத்திற்குள் எங்கிருந்தாவது போர்டிங் செய்யும் வகையில் ரயில் புக் செய்கிறார்கள். எக்மோரோ, கிண்டியோ புக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில் டிக்கெட் இல்லாத பட்சத்தில் அது ஜெனரல் வெயிட்டிங் லிஸ்டில் வரும்.
அதுவே நீங்கள் திருச்சியில் உள்ளீர்கள். இதே ரயிலில் திருச்சியில் இருந்து குமரிக்கு நீங்கள் புக் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட சமயத்தில் உங்களுக்கு Pooled Quota Waitlist வரும். பொதுவாக ஜெனரல் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்களுக்கே வேகமாக சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதற்கு காரணம் உள்ளது சென்னை - குமரி பயணத்தில் புக் செய்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்பதால் அதில் சிலர் புக்கிங்கை கேன்சல் செய்ய வாய்ப்பு உள்ளது. சிலர் சிதம்பரத்திலேயே இறங்க வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை - குமரி பயணத்தில் புக் செய்து வெயிட்டிங் லிஸ்டில் வந்தவர்களுக்கு.. அதாவது ஜெனரல் வெயிட்டிங்கில் வந்தவர்களுக்கு உடனே டிக்கெட் கன்பார்ம் ஆகும்.
அதுவே அதே ரயிலில் திருச்சி - குமரி செய்யும் பட்சத்தில்.. அந்த குறுகிய தூரத்திற்கு டிக்கெட் கேன்சல் செய்யும் ஆட்கள் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் Pooled Quota Waitlist வரும் நபர்களுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இடம் கிடைப்பது கடினம்.
வேறு என்ன விதிகள்?: இது போக நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்களுக்கு எந்த பெர்த் கிடைக்கிறதோ அந்த பெர்த்துக்கு ஏற்றபடி உங்களுக்கான விதிகள் மாறுபடும். இது தொடர்பாக ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
சைடு அப்பர் - நீங்கள் சைடு அப்பரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். அங்கே உங்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. உங்களுக்கு மேல் உள்ள விளக்கை 10 மணிக்கு மேல் இரவில் எரிய விட கூடாது. நீங்கள் பகல் நேரத்தில் சைடு லோயரில் இருக்க விரும்பினால் இருக்கலாம். ஆனால் இரவு 10க்கு மேல் சைடு லோயரில் நீங்கள் அமர கூடாது.
சைடு லோயர் - நீங்கள் சைடு லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம். ஆனால் சைடு அப்பரில் உள்ளவர் கீழ அமர விரும்பினால் அவருக்கு பகல் நேரத்தில் மட்டும் இடம் கொடுக்க வேண்டும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் சைடு அப்பரில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
லோயர் - நீங்கள் லோயரில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களுடன் அமர இடம் கொடுக்கப்பட வேண்டும். மிடில் சீட்டை தூக்காமல், அவரை உங்களுடன் அமர வைக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை மிடில் சீட்டில் இருப்பவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் பகலிலும் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு செல்ல வேண்டும்.
மிடில் - நீங்கள் மிடிலில் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியாது. 10 மணிக்கு பின்தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் சீட்டில் இருப்பவருடன் அமர வேண்டும். மிடில் சீட்டை தூக்கி லோயர் சீட்டில் இருப்பவர்களுக்கு உட்கார முடியாமல் இடையூறு கொடுக்க முடியாது. ஒருவேளை லோயர் சீட்டில் இருப்பவர் உங்களை தூங்க அனுமதித்தால் மட்டுமே நீங்கள் பகலிலும் மிடிலில் தூங்கிக்கொள்ள முடியும். அதாவது இரவு 10 மணி வரை மட்டும் இருக்கைகளை பகிர நீங்கள் அனுமதிக்கலாம். அதன்பின் மிடிலில் உள்ளவர் அவரின் இடத்திற்கு சென்று தூங்க முடியும்.
அப்பர் - அப்பரில் இருப்பவர் யாருடனும் இருக்கையை பகிர வேண்டியது இல்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம்.இந்த விதிகளை சக பயணிகள் மதிக்கவில்லை நீங்கள் ஆர்டிஓவிடம் புகார் அளிக்கலாம்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications