மெட்ராஸுக்கு தமிழ்நாடு என பெயர் வைப்பதால் என்ன கிடைக்கும்? மத்திய அரசுக்கு அண்ணா அளித்த பதில் என்ன?
சென்னை: சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைப்பதால் என்ன கிடைத்துவிட போகிறது என நாடாளுமன்றத்தில் கேட்ட போது அதற்கு முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா கூறிய விளக்கம் என்ன தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. விடுதலை போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடைய இருந்தன.

ஒரே பாரதம்
இப்போது நமது நாடு ஒரே பாரதம். பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது. நமது பாரத தேசத்தை பிளவுப்படுத்தி அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான எதிர்மறையான அரசியல் சூழல் உள்ளது.

தவறான எதிர்மறையான அரசியல்
தமிழகத்தில் தவறான எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றந. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகிறார்கள். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆளுநர் பேசியுள்ளார்.

சர்ச்சை
ஆளுநரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா வைத்த போது எந்த மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டன என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை மாகாணம்
"சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயரை மாற்றிவிட்டதால் என்ன கிடைத்து விட போகிறது என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணா கூறுகையில் மக்களவையை லோக்சபா என்றும் மாநிலங்களவையை ராஜ்யசபா என்றும் குடியரசுத் தலைவரை ராஷ்டிரபதி என்றும் அழைப்பதால் உங்களுக்கு என்ன கிடைத்ததோ அதுதான் எங்களுக்கும் கிடைக்க போகிறது என அண்ணா இடித்துரைத்தார்.

திருச்சி சிவா
இதுகுறித்து திருச்சி சிவா தனது ட்விட்டரில் வீடியோ பதிவாக கூறுகையில், தமிழ்நாடு என பெயர் மாற்றம் கேட்ட போது அண்ணாவிடம் மத்திய அரசு, "நாட்டுக்குள்ளேயே ஒரு நாடா என கேள்வி எழுப்பினர். இதை சொல்லிக் கொடுத்தது ராஜாஜி. தமிழ்நாடு என கேட்கிறார் எச்சரிக்கையாக இருங்கள் என மத்திய அரசிடம் ராஜாஜி தெரிவித்தார். திராவிட நாடு கேட்டு அதை விட்டுவிட்டு தற்போது தமிழ்நாடு என கேட்கிறார்கள். இது தொலைநோக்கு பார்வை என்று ராஜாஜி சொல்லியதை வைத்து அண்ணாவிடம் நாட்டுக்குள்ளேயே நாடா என கேட்டார்கள்.

இந்தியா துணை கண்டம்
அதற்கு அண்ணா சொன்னார்- திருத்திக் கொள்ளுங்கள், இந்தியாவே ஒரு நாடல்ல. இந்தியா என்பது ஒரு துணை கண்டம். ஒரு நாடு என்றால் ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு இனம், ஒரு கோட்பாடு, ஒரு கொள்கை இருக்கும். ஆனால் இந்தியாவில் பல மொழிகள், கோட்பாடுகள், கொள்கைகள் இருக்கின்றன என பதில் அளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications